டெல்லி ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு

நேற்றைய போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா

நேற்றைய போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா

Updated on: 
2 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​க வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்​தி, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்​கட்சி எம்​பிக்கள் சுமார் 300 பேர் இதில் பங்கேற்றனர்.

நாடாளு​மன்ற வளாகத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வுக்கு அவர்கள் பேரணி​யாகச் சென்​றனர். அகில இந்​திய வானொலி நிலை​யம் (ஆகாஷ்வாணி) அரு​கில் போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள், தலை​வர்​கள், தொண்​டர்​களை தடுத்து நிறுத்​தினர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் தடுப்​பு​களின் மீது ஏறி கோஷமிட்​டனர். பின்​னர் அகில இந்​திய வானொலி நிலைய வளாகத்​தில் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். அவர்களை டெல்லி போலீ​ஸார் வேனில் ஏற்​றினர். எனினும், ராகுலும் பிரி​யங்கா​வும் வேனில் இருந்து இறங்கி மீண்​டும் வானொலி நிலைய வளாகத்​தில் நுழைந்​தனர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்​தி, 50 எம்​பிக்​கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்​தில் தொடர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். சுமார் 9 மணி நேரத்​துக்​கும் மேலாக அவர்​களின் தர்ணா நீடித்​தது. இரவு 8 மணி அளவில் டெல்லி போலீ​ஸார் அவர்களை கைது செய்து அங்​கிருந்து வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்​றினர்.

இந்நிலையில், அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஆகாஷ்வாணி ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 10 எம்பிக்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீஸார் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர், “குறைந்தது 10 எம்பிக்கள் மற்றும் அடையாளம் காணக்கூடிய பிற நபர்களின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றவியல் அத்துமீறல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். அவருடன் எம்பிக்களும் இருந்தனர். அவர் வலுக்கட்டயமாக நுழையவில்லை. அந்த அமைப்புகள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல. அவை நாட்டுக்கு சொந்தமானவை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் அது எதிர்க்கட்சிகளின் போராட்டங்களைத் தடுக்காது. முதல் தகவல் அறிக்கைக்கு அஞ்சி நாங்கள் பின்வாங்கிவிடுவோம் என அவர்கள் தவறாக நினைக்கக்கூடாது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் சந்திக்கத் தயாராக இல்லை. இனி, நாங்கள் அவர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு அமர்ந்து போராடுவோம்.” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நேற்றைய போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா</p></div>
கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த லியோனல் மெஸ்ஸி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in