ஆர்எஸ்எஸ் பற்றி அவதூறு பேச்சு: பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்

ஆர்எஸ்எஸ் பற்றி அவதூறு பேச்சு: பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்
Updated on
1 min read

மும்பை: ஆர்​எஸ்​எஸ் செயற்​பாட்​டாளர் தொடர்ந்த அவதூறு வழக்​கில் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​தி, மகா​ராஷ்டிர மாநில நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார்.

ராகுல் காந்தி 2014 மக்​களவைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்போது, மகாத்மா காந்தி படு​கொலை​யில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்​குத் தொடர்பு இருப்​ப​தாக குற்​றம் சாட்​டி​னார். இதற்கு எதி​ராக மகா​ராஷ்டிர மாநிலம் பிவாண்டி நீதி​மன்​றத்​தில் ஆர்​எஸ்​எஸ் செயற்​பாட்​டாளர் ராஜேஸ் குந்தே வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்​கில் ராகுல் காந்​திக்கு பிவாண்டி மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் 2016-ல் ஜாமீன் வழங்​கியது. அப்​போது ராகுல் காந்​திக்கு முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீல் உத்​தர​வாதம் அளித்​திருந்​தார். கடந்த ஆண்டு டிசம்​பர் 12-ம் தேதிபாட்டீல் கால​மா​னார். இதனால் ராகுலின் ஜாமீனுக்கு வேறு ஒரு​வர் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டியது அவசி​ய​மானது.

இந்த சட்ட நடை​முறையை நிறைவேற்ற ஆஜராகு​மாறு ராகுல் காந்​திக்கு பிவாண்டி நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதை ஏற்று ராகுல் நேற்று பிவாண்டி நீதி​மன்​றம் வந்​தார். மகா​ராஷ்டிர மாநில காங்​கிரஸ் தலை​வர் ஹர்​ஷ்வர்​தன் சப்​கல் மற்​றும் தனது வழக்​கறிஞர்​களு​டன் காலை 11 மணிக்கு நீதிபதி முன் ஆஜரா​னார். அப்​போது ராகுல் காந்​திக்​காக சப்​கல் உத்​தர​வாத பத்​திரம் அளித்​தார். இதையடுத்து ராகுல் காந்​தி மீண்​டும்​ ஜாமீன்​ பெற்​று திரும்​பிச்​ சென்​றார்​.

ஆர்எஸ்எஸ் பற்றி அவதூறு பேச்சு: பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in