மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து

மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் பிறந்​த​நாளை முன்​னிட்​டு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அந்​நாட்டு அதிபர் புதினின் வாழ்த்​துச் செய்​தி​யை​யும், இரு தலை​வர்​களும் இணைந்​திருக்​கும் புகைப்​படத்​தை​யும் தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்​டது.

அந்த வாழ்த்​துச் செய்​தி​யில், மோடி தனது நாட்டு மக்​களிடையே ஆழ்ந்த மரி​யாதையை​யும், உலக அரங்​கில் பெரும் செல்​வாக்​கை​யும் பெற்​றிருப்​ப​தாக புதின் குறிப்​பிட்​டுள்​ளார். இந்​தி​யா-ரஷ்யா இடையே​யான சிறப்பு மற்​றும் ராஜாங்க கூட்​டாண்​மையை வலுப்​படுத்​து​வ​தில் மோடி​யின் தனிப்​பட்ட பங்​களிப்பு மிக முக்​கிய​மான​தாகும் என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், கடந்த வாரம் டெல்லி பயணத்​தின்​போது தனக்​கும் தனது குழு​வுக்​கும் அளித்த சிறப்​பான வரவேற்​புக்கு புதின் நன்றி தெரி​வித்​துள்​ளார். மோடி​யுட​னான பேச்​சு​வார்த்தை முக்​கிய​மாக​வும் வெளிப்​படை​யாக​வும் இருந்​த​தாக​வும் அவர் குறிப்​பிட்​டார். மேலும், பிரதமரின் அரசி​யல் விவேகம் மற்​றும் தொலைநோக்​குப் பார்​வையை​யும் அவர் பாராட்​டி​யுள்​ளார்.

நட்பு நாடு​களான நமது இரு நாடு​களின் நலனுக்​காக இருதரப்பு மற்​றும் பன்​னாட்​டுப் பிரச்​சினை​கள் குறித்த ஆக்​கப்​பூர்​வ​மான ஒத்​துழைப்​பைத் தொடர்ந்து முன்​னெடுத்​துச் செல்​வோம் என்​றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்​திர மோடிக்கு இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்​துள்​ள் வாழ்த்​துச் செய்​தி​யில், தனது நண்​ப​ரான பிரதமர் மோடிக்கு நல்ல உடல்​நலம், ஆற்​றல் மற்​றும் வெற்றி கிடைக்க வாழ்த்​து​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். இந்​தியா மற்​றும் இத்​தாலி இடையே​யான ஆழமான நட்​புறவு மேலும் வலு​வடைந்து வரு​வ​தாக​வும், இரு நாடு​களின் ஒத்துழைப்பு மற்​றும் வளமான எதிர்​காலத்​துக்​காக இணைந்து செயல்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் பெரு​மிதத்​துடன் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து
நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in