ரூ.40 கோடி ஹெராயினுடன் பஞ்சாப் காவலர் கைது

ரூ.40 கோடி ஹெராயினுடன் பஞ்சாப் காவலர் கைது
Updated on: 
1 min read

சண்டிகர்: சர்வதேச எல்லையில் ட்ரோன் மூலம் நடக்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் இருந்த பஞ்சாப் காவலர் ஒருவர், தரன் தாரன் மாவட்டத்தில் 15 கிலோ ஹெராயினுடன் பிடிபட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ.40 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவலர் கரண்தீப் சிங் ஆவார். எல்லை மாவட்டமான தரன் தாரனின் சராய் அமானத் கான் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் விசாரணை முகமைகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர் பிடிபட்டார்.

எல்லையிலிருந்து ஹெராயினைத் தனது சொந்த ஊரான புஸ்ஸேவுக்கு அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஹெராயின் எங்கிருந்து வந்தது, யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டது, கடத்தல் முயற்சியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.40 கோடி ஹெராயினுடன் பஞ்சாப் காவலர் கைது
தமிழக பாஜகவின் புதிய தலைவர் சரத்குமார்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in