சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை

கேதன் விஷால் அகர்​வால், சியா கோயல்

கேதன் விஷால் அகர்​வால், சியா கோயல்

Updated on
2 min read

புனே: மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்​குநர் கேதன் விஷால் அகர்​வால்​(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டது.

ஆனால் இவருக்கு இந்த திரு​மணத்​தில் விருப்​பம் இல்​லை. தனது காதலன் சேத்​தன் சவுத்ரி (22) என்​பவரை திரு​மணம் செய்ய விரும்பி​யுள்​ளார். பெற்​றோர் வற்​புறுத்​தல் காரண​மாக கேதன் விஷாலுடன் நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றுள்​ளது. இதனால் கேதன் விஷாலை கொலை செய்ய முடிவு செய்​தார். தங்​கள் பகு​தி​யில் உள்ள லோகா​காட் கோட்​டைக்கு அழைத்​துச் சென்று மலை உச்சியில் இருந்து கேதனை தள்ளி கொலை செய்ய முடிவு செய்தார்.

இவர்​கள் லோகா​காட் கோட்​டைக்கு கடந்த மே 31, ஜுன் 14 மற்​றும் 18ம் தேதி​களில் மலை​யேற்​றத்​துக்கு சென்​றுள்​ளனர். ஜுன் 14ம் தேதியே கேதனை பள்​ளத்​தில் தள்​ளி​விட முயன்​றுள்​ளார். ஆனால் அரு​கில் உள்ள புதரைப் பிடித்து கேதன் தப்​பித்​தார். அப்​போது பாம்பு ஒன்று வந்​த​தாக கூறி சியா, கேதனை ஏமாற்​றி​யுள்​ளார்.

மூன்​றாவது முறை​யாக கடந்த 18ம் தேதி தனது காதலனை பின் தொடர்ந்து வரச் செய்து இரு​வரும் சேர்ந்து கேதனை பள்​ளத்​தில் தள்ளி கொலை செய்​துள்​ளனர். மலை உச்​சி​யில் போட்டோ எடுக்க முயன்​ற​போது, கேதன் தவறி விழுந்​த​தாக சியா கூறிய​தால், இது தற்​செயல் விபத்​தாக வழக்​குப்​ ப​திவு செய்​யப்​பட்​டது. கேதன் இறந்த 4 நாள் கழித்து அவரது வீட்​டுக்கு இரங்​கல் தெரிவிக்க சியா சென்​றார்.

அப்​போது கேதன் எப்​படி பள்​ளத்​தில் விழுந்​தார் என அவரது சகோதரி சியா​விடம் பல கேள்வி​கள் எழுப்​பி​னார். இதில் சியா அளித்த பதில்​கள் முன்​னுக்கு பின் முரண​ாக இருந்​த​தால் அவர் மீது கேதன் சகோ​தரிக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. இதை அவர் தனது குடும்​பத்​தா​ரிடம் தெரிவிக்க, அவர்​கள் போலீ​ஸாரிடம் கேதன் மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக தெரி​வித்​தனர். இதையடுத்​து​தான் போலீ​ஸார் வேறு கோணத்​தில் தங்​கள் விசா​ரணையை தொடங்​கினர்.

சியா​வுக்கு சேத்​தன் என்​பவருடன் தொடர்பு இருந்​தது தெரியவர அவர்​களது போன் அழைப்​பு​களை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் இந்த ஆண்​டில் மட்​டும் இரு​வரும் 2,004 முறை மொத்​தம் 238 மணி நேரம் பேசி​யுள்​ளனர். விபத்து நடந்த பகு​தி​யில் சிசிடிவி கேமி​ராக்​களை ஆய்வு செய்​த​போது, தலையை மறைக்​கும் ஹுடி சட்டை அணிந்த நபர், கேத்​தன் மற்​றும் சியா ஆகியோர் சென்ற வாக​னத்தை பின்​ தொடர்ந்​தது தெரிய​வந்​தது. ஜுன் மாதம் கொளுத்​தும் வெயி​லில் இவர் தலையை மறைக்​கும் உடை​யுடன் சென்​றது போலீ​ஸாரின் சந்​தேகத்தை வலு​வடையச் செய்​தது.

மேல் விசா​ரணை​யில் அவர் ஷியா​வின் காதலன் சேத்​தன் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. அடுத்​த கட்​ட​மாக நடை​பெற்ற விசாரணையில்​ தான் கேதனை இரு​வரும் 350 அடி ஆழ பள்ளத்தாக்​கில் தள்ளி கொலை செய்​ததை ஒப்​புக் கொண்​டனர். கேதனின் சகோ​தரிக்கு மட்​டும் சியா மீது சந்​தேகம் எழவில்லை என்​றால், இந்த திட்​ட​மிட்​ட கொலை சம்​பவம்​, தற்​செயல்​ விபத்தாகவே முடிந்​திருக்​கும்​.

<div class="paragraphs"><p><em>கேதன் விஷால் அகர்​வால், சியா கோயல்</em></p></div>
கொல்​கத்​தா​வில் சேமிப்பு கிடங்கு இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in