கொல்​கத்​தா​வில் சேமிப்பு கிடங்கு இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கொல்​கத்​தா​வில் சேமிப்பு கிடங்கு இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: கொல்​கத்​தா​வின் தரதலா பகு​தி​யில் உள்ள பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலை​யம் அருகே சேமிப்பு கிடங்கு கட்​டு​மானப் பணி கடந்த ஓராண்​டாக நடை​பெற்று வந்​தது.

நேற்று மதி​யம் சுமார் 1.30 மணி​யள​வில், மூன்று அடுக்​குக் கிடங்கின் மூன்​றாவது தளத்​தில் கூரை அமைக்​கும் பணி நடந்​து​கொண்​டிருந்​த​போது, திடீரென அந்தக் கட்​டடிம் நிலை குலைந்து கீழே விழுந்​தது. இதில், கட்​டு​மானத் தொழிலா​ளர்​கள் 3 பேர் உயிரிழந்​தனர்.

இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருந்த 18 பேர் மீட்​கப்​பட்​டுள்ள நிலையில், மேலும் 18 பேர் உள்ளே சிக்​கி​யிருக்​கலாம் என அஞ்சப்படு​கிறது. மீட்புப் பணி தொடர்கிறது.

கொல்​கத்​தா​வில் சேமிப்பு கிடங்கு இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in