ஆந்திராவில் போராட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

ஆந்திராவில் போராட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
Updated on
1 min read

அமராவதி: ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் (100 நாள்) பெயரை மத்திய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 2ம் தேதி இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராஜசேகர ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் தொடங்கி வைத்தனர்.

ஆதலால், அதே நாளில் ஆந்திராவில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் வர சம்மதம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

ஆந்திராவில் போராட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
கூட்டணி குறித்து ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in