முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
Updated on: 
1 min read

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் முதலீட்​டாளர்​கள் மாநாடு-2026 நேற்று தொடங்​கியது. 3 நாள் நடைபெறும் இதில் முக்​கிய விருந்​தின​ராக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கலந்து கொண்​டார். மேலும், மத்​திய அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு, ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண் மற்​றும் 58 நாடுகளை சேர்ந்த நிறு​வன சிஇஓக்​கள், நிர்​வாக இயக்குநர்​கள் பங்​கேற்​றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசிய​தாவது: என் தலை​மையில் இது​வரை 8 முதலீட்டாளர்​கள் மாநாடு நடந்​துள்​ளது. என் மீதுள்ள நம்பிக்கையில் பல நிறு​வனங்​கள் இங்கு தொழில் தொடங்க முன்வந்​தது மகிழ்ச்சி அளிக்​கிறது. 2024 ஜூன் மாதம் முதல் ரூ.22.6 லட்சம் கோடி முதலீடுகளு​டன் 714 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தானது. இதில் ரூ.7.3 லட்​சம் கோடி முதலீடுகள் தொழில் தொடங்​கும் நிலை​யில் உள்ளது.

முதலீட்​டாளர்​களுக்கு உரிய பாது​காப்பு சட்​டத்தை இயற்​று​வது மிக அவ​சி​யம். இதை மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயலிடம் என்னுடைய கோரிக்​கை​யாக வைக்​கிறேன். ஆட்​சிகள் மாறும்​போது இது ஒரு காழ்ப்​புணர்​வாக தொழிற்​சாலைகள் மீது செயல்படுத்தப்​படு​கிறது.

இது தொடர்​பாக ஆந்​திர அமைச்​சரவை மற்​றும் பேரவை, மேல​வை​களில் சட்​டம் இயற்றி அனுப்பி வைக்​கிறோம். இதனை தேசிய அளவில் சட்​டம் இயற்​றினால், இந்​தி​யாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடி​யாது. இவ்​வாறு அவர் பேசினார். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில், சந்திரபாபுவுக்கு நிகர் அவரே தான் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
இன்று ‘பிங்க்’ மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

X