காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

Published on

புதுடெல்லி: காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​வின் மகன் ரெஹானின் திருமண நிச்​சய​தார்த்​தம் விரை​வில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஏழு ஆண்​டு​களாக காதலித்து வந்த வகுப்​புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்​கிறார் ரெஹான்.

முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா - ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார்.

கால் பந்​தாட்ட வீராங்​க​னை​யாக​வும் இருந்​துள்​ளார் அவி​வா. ரெஹானும் புகைப்​படக் கலைஞ​ராக இருக்​கிறார். இவர் தனது கலை இணை​யதளத்​தில் வனவிலங்​கு​கள், தெருக்​களில் உள்ள காட்​சிகள், வர்த்​தகங்​கள் போன்​றவற்றை விளக்​கும் புகைப்​படங்​கள் பதி​விட்​டுள்​ளார். ‘படைப்பு சுதந்​திரம்’ என்ற தலைப்​பில் கடந்த 2021-ம் ஆண்டு தனது முதல் புகைப்​படக் கண்​காட்​சியை டெல்​லி​யில் நடத்தி உள்​ளார் ரெஹான்.

இந்​நிலை​யில், இரண்டு குடும்​பத்​தினர் முன்​னிலை​யில் அவி​வாவை திரு​மணம் செய்து கொள்ள விரும்​புவ​தாக ரெஹான் தெரி​வித்​துள்​ளார். அதை அவி​வா​வும் ஏற்​றுக் கொண்​டுள்​ளார். இதையடுத்து இரண்டு குடும்​பத்​தினரின் சம்​மதத்​துடன் இந்த திரு​மணம் நடை​பெறுகிறது. முன்​ன​தாக ராஜஸ்​தான் மாநிலம் ரத்​தம்​போர் பகு​தி​யில் இன்று ரெஹான் - அவிவா திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெறு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இதற்​கிடை​யில், ரெஹானுடன் இருக்​கும் புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் அவிவா வெளி​யிட்​டுள்​ளார். இவர்​களது திருமண தேதி இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. அவி​வா​வின் தாய் நந்​திதா பெய்க்​கும் பிரி​யங்கா​வும்​ நீண்​ட கால நண்​பர்​கள்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்
ராஜஸ்தானுக்கு வந்த ராகுல், பிரியங்கா காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in