சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ராகுல் வராத நிலையில் பிரியங்கா பங்கேற்பு

சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ராகுல் வராத நிலையில் பிரியங்கா பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத்​தொடர் நேற்று முடிந்த பிறகு சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். கடந்த முறை போலவே இந்த முறை​யும் தேநீர் விருந்தை எதிர்க்​கட்​சிகள் புறக்​கணிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

அதற்​கேற்ப, எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி இதில் பங்​கேற்​க​வில்​லை. நாடாளு​மன்ற கூட்​டத்​தொடர் முடிவதற்கு 2 நாட்​களுக்கு முன்பே ராகுல் ஜெர்​மனி சென்று விட்​டார். ஆனால், யாரும் எதிர்​பார்க்​காத வகை​யில் பிரி​யங்கா காந்தி உள்​ளிட்ட பலர் தேநீர் விருந்​தில் பங்​கேற்​றனர்.

விருந்​துக்கு முன்​ன​தாகவே வந்த பிரி​யங்​கா, பிரதமர் மோடி​யுடன் சிரித்​துப் பேசி​னார். காங்கிரஸ் எம்​.பி.க்​கள் குமாரி சைலஜா சிங், மாணிக்​கம் தாகூர் மற்​றும் முகமது ஜாவேத் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். மாநிலங்​களவை​யில், கார்​கே, சோனி​யா, திக்​விஜய் சிங் மற்​றும் ஜெய்​ராம் ரமேஷ் ஆகியோர் பங்​கேற்​றனர்.

சோனியா உட்பட காங்கிரஸ் எம்​.பி.க்​கள் பாஜக தலைமையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​.பி.க்​களு​டன் சிரித்து பேசி தேநீர் அருந்​தினர். இந்​தளவுக்கு ஆளும் கூட்​டணி கட்சி - எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் இணக்​க​மாக இருப்​பார்​கள் என்று யாரும் எதிர்​பார்க்​க​வில்​லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் வட்​டாரம் கூறும்​போது, ‘‘மத்​திய அரசின் மசோ​தாக்​களுக்கு மக்​களவை​யில் நாங்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தோம். முந்​தைய கூட்​டத்​தொடருடன் ஒப்​பிடும் போது இந்த முறை அவை​யின் நிலைமை முற்​றி​லும் வித்​தி​யாச​மாக இருந்​தது. எதிர்க்​கட்​சிகளுக்​கும் தங்​கள் கருத்​துக்​களைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. இதன் விளை​வாக, 2014-க்கு பிறகு கடந்த கால நாடாளு​மன்​றக் கூட்​டத்​தொடரின் போது காணப்​பட்ட எதிர்க்கட்​சிகளின் அதிருப்தி இந்த முறை காண​வில்​லை. இதனால், தேநீர் விருந்​தில் பங்கேற்க கட்​சித் தலை​வர் கார்கே முடிவு செய்​தார்’’ என்​றனர்.

நாடாளு​மன்​றக் கூட்​டத்​தொடருக்கு இடையே, 3 நாடு​கள் சுற்​றுப்​பயணத்தை முடித்​துக் கொண்​டு டெல்​லி திரும்​பிய பிரதமர்​ மோடி​யும்​ தேநீர்​ விருந்​தில்​ கலந்​து கொண்​டார்​.

சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ராகுல் வராத நிலையில் பிரியங்கா பங்கேற்பு
டெல்லியில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in