

புதுடெல்லி: தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் சாலை, ரயில், விமான சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மையால் டெல்லியில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் அருகருகே உள்ள வாகனங்கள் கூட தெரியாதபடி பனிமூட்டம் காணப்பட்டது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் மாநிலங்களிலும் இந்த கடும் பனிமூட்டம் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.