அகமதாபாத்: 4-ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியர், இயக்குநர் மீது வழக்கு

அகமதாபாத்: 4-ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியர், இயக்குநர் மீது வழக்கு
Updated on
1 min read

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்​ளி​யில் 4-ம் வகுப்பு படிக்​கும் சிறு​வன், வகுப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, ஒரு காகிதத்​தில் ‘ஐ லவ் யூ’ என எழுதி சக மாணவி ஒரு​வர் மீது வீசி​ய​தாகக் கூறப்படு​கிறது.

இதையடுத்​து, சிறுமி அந்​தக் காகிதத்தை ஆசிரியரிடம் கொடுத்து அழுத​படியே புகார் கூறி​யுள்​ளார். சீமா கோஸ்​வாமி என்ற ஆசிரியர் முதலில் அந்​தக் காகிதத்​தைக் கிழித்​தெறிந்​து​விட்டு மாணவனைக் கண்​டித்து அறி​வுரை வழங்கி உள்​ளார். இருப்பினும், சிறுமி தொடர்ந்து மனவேதனை​யில் இருந்​த​தால், இந்த விவ​காரம் முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்​து, மாணவனின் தாயார் பள்​ளிக்கு அழைக்​கப்​பட்​டார். அவர் பள்ளி நிர்​வாகத்​தினருடன் பேசி​விட்​டுச் சென்ற சிறிது நேரத்​தில் உறவினர்​களு​டன் மீண்​டும் திரும்பி வந்​து, தனது மகன் கடுமை​யாக தாக்​கப்​பட்டு உடலில் காயங்​கள் இருப்​ப​தாகக் குற்றம்​சாட்​டி​னார்.

இதையடுத்து குடும்​பத்​தினர் அவசர ஆம்​புலன்ஸை அழைத்​து, மாணவனை மருத்​துவ பரிசோதனைக்​காக மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். மேலும் இதுகுறித்து போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர். அதன் பேரில் ஆசிரியர் சீமா கோஸ்​வாமி மற்​றும் பள்ளி இயக்​குநர் இந்​திரஜித் மவுர்யா மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

அகமதாபாத்: 4-ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியர், இயக்குநர் மீது வழக்கு
சென்னை விமான நிலைய விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in