தனியார் ராக்கெட் பயணம் வெற்றி: தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து

தனியார் ராக்கெட் பயணம் வெற்றி: தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா, சீனா​வைத் தொடர்ந்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​துள்​ளது.

‘விக்ரம்-1’ ராக்கெட் பயண வெற்​றியைத் தொடர்ந்​து, ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ நிறு​வனத்தின் இணை நிறு​வனர்​கள் பவன்​கு​மார் சந்​த​னா, நாகா பரத் தாகா ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார்.

அப்​போது பிரதமர், “இந்​தி​யாவை நீங்​கள் பெரு​மைப்​படுத்தியுள்ளீர்​கள். நம் விண்​வெளி கனவு​கள் குறித்து பலர் சந்தேகம் எழுப்​பினர். ஆனால், விண்​வெளி​யில் இந்​தி​யா​வின் லட்சி​யங்​களை விதைத்​து, இளைஞர்​களின் கனவு​களுக்கு வேரூன்றி இருக்கிறீர்கள்.

இந்​திய இளைஞர்​களால் எல்​லாம் செய்ய முடி​யும் என நிரூபித்துள்​ளீர்​கள். இந்​திய இளைஞர்​கள் மீது நான் வைத்த நம்பிக்​கையை நிஜ​மாக்கி விட்​டீர்​கள். நம்​பிக்கை வைத்​தால் அதிச​யங்​களை நிகழ்த்த முடி​யும் என்​பதை இக்​குழு நிரூபித்துள்ளது” என்​று வாழ்த்​தி​னார்​.

தனியார் ராக்கெட் பயணம் வெற்றி: தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து
கல்வி முறையை அடியோடு மாற்ற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in