கோவாவில் ரவுடி ஜாமினில் விடுதலையானதை கொண்டாடிய சிறை வார்டன் சஸ்பெண்ட்

கோவாவில் ரவுடி ஜாமினில் விடுதலையானதை கொண்டாடிய சிறை வார்டன் சஸ்பெண்ட்
Updated on
1 min read

பனாஜி: கோ​வா​வில் ரவுடி ஜாமினில் விடு​தலை​யானதை அடுத்து நடந்த கொண்​டாட்​டத்​தில் பங்​கேற்ற சிறை வார்​டன் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார்.

கோவா மாநிலத்​தின் தெற்கு பகு​தி​யில் கடந்த ஆண்டு இரு ரவுடி கும்​பல்​களுக்கு இடையே மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட அமோக் நாயக் பனாஜி​யில் உள்ள மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தார். அவருக்கு உள்​ளூர் நீதி​மன்​றம் சமீபத்​தில் ஜாமீன் வழங்​கியது.

இந்த சூழ்​நிலை​யில், ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வேக​மாக பகிரப்​பட்​டது. அதில், மத்​திய சிறையி​லிருந்து அமோக் நாயக் வெளியே வந்​த​போது, அவர் மீது மதுவை பீய்ச்​சி​யடித்​தும் பட்​டாசு வெடித்​தும் சிலர் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அத்​துடன் அங்கு எடுக்​கப்​பட்ட குழு புகைப்​படத்​தில், சிறை வார்​டன் லட்​சுமண் பட்​லோஸ்​கரின் தோளில் கையைப் போட்​டபடி நாயக் போஸ் கொடுத்​துள்​ளார்.

இந்த தகவலை அறிந்த சிறைத் துறை, வார்​டன் பட்​லோஸ்​கரை நேற்று சஸ்​பெண்ட் செய்​தது. இந்த தகவலை உறு​திப்​படுத்​தி​யுள்ள காவல் கண்​காணிப்​பாளர் (சிறை​கள்) சுசேதா தேசாய், அவரிடம் விசா​ரணை நடை​பெறு​வ​தாக தெரி​வித்​துள்​ளார்.

வடக்கு கோவா​வில் அமைந்​துள்ள கோல்​வேல் மத்​திய சிறைச்​சாலைக்​குள் செல்​போன்​கள் மற்​றும் கடத்​தல் பொருட்​கள் கிடைப்​பது குறித்து மும்பை உயர் நீதி​மன்​றத்​தின் கோவா அமர்வு கவலை தெரி​வித்த 2 நாட்​களுக்​குப் பிறகு, சிறை வார்​டன்​ ஒரு​வர்​ சஸ்​பெண்​ட்​ செய்​யப்​பட்​டுள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கோவாவில் ரவுடி ஜாமினில் விடுதலையானதை கொண்டாடிய சிறை வார்டன் சஸ்பெண்ட்
8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு இல்லையா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in