

கொல்கத்தா: மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நமது சமூகங்களின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையை நிலை நிறுத்தும் நமது அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பவருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர மதிப்பூதியத்தை ரூ.500 உயர்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் அவர்கள் இனி மாதம் ரூ.2,000 பெறுவார்கள். மேலும், அனைத்து புதிய விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.