பாதுகாப்பு வளையத்தை மீறி திருமலையில் பக்தர்களுக்கு சாக்லெட் விநியோகித்த முர்மு

பாதுகாப்பு வளையத்தை மீறி திருமலையில் பக்தர்களுக்கு சாக்லெட் விநியோகித்த முர்மு
Updated on
1 min read

திருமலை: திரு​மலை​யில் நேற்று காலை ஏழு​மலை​யானை தரிசித்த பிறகு வெளியே வந்த குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பாது​காப்பு வளை​யத்தை மீறி அங்​குள்ள பக்​தர்​களுக்கு சாக்​லெட் வழங்​கி​னார்.

இரண்டு நாள் பயண​மாக குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த வியாழக்​கிழமை மாலை ரேணி​குண்டா வந்​தார். அவரை விமான நிலை​யத்​தில் ஆந்​திர இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ராம்​நா​ராயண ரெட்டி வரவேற்​றார். இதையடுத்து திருச்சானூர் பத்​மாவதி தாயார் கோயிலுக்கு சென்​று, முர்மு வழிபட்டார். இதைத் தொடர்ந்து காரில் திரு​மலைக்கு வந்த முர்​முவை தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு வரவேற்​றார். இரவு திரு​மலை​யில் முர்மு தங்​கி​னார்.

இந்​நிலை​யில் நேற்று காலை​யில் அவர் தனது குடும்​பத்​தினருடன் ஏழு​மலை​யான் கோயிலுக்​குச் சென்று ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். இதைத்​தொடர்ந்​து, அவர் காரில் புறப்​பட்டு வெளியே வரும்​போது, ராம்​பக்​கீச்சா பேருந்து நிலை​யம் அருகே அவரை காண பக்​தர்​கள் ஆவலுடன் காத்​திருந்​தனர். உடனே காரை நிறுத்​தச் சொன்ன முர்​மு, பாது​காப்பு வளை​யத்தை மீறி பக்​தர்​கள் அரு​கில் சென்று அவர்​களுக்கு சாக்​லெட் வழங்​கி​னார்.

பாதுகாப்பு வளையத்தை மீறி திருமலையில் பக்தர்களுக்கு சாக்லெட் விநியோகித்த முர்மு
குண்டுவெடிப்பால் காஷ்மீரிகளுக்கு சிக்கல்: சமூக புறக்கணிப்பு, மிரட்டல் வருவதாக மாணவர்கள் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in