குண்டுவெடிப்பால் காஷ்மீரிகளுக்கு சிக்கல்: சமூக புறக்கணிப்பு, மிரட்டல் வருவதாக மாணவர்கள் புகார்

குண்டுவெடிப்பால் காஷ்மீரிகளுக்கு சிக்கல்: சமூக புறக்கணிப்பு, மிரட்டல் வருவதாக மாணவர்கள் புகார்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு தாக்குதல் வழக்கில் பலர் கைதாகி உள்​ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்​தவர்​கள். இதனால் வட மாநிலங்​களில் தங்​களை சந்​தேகக்​கண் கொண்டு பார்ப்​ப​தாக ஜம்​மு-​காஷ்மீரைச் சேர்ந்​தவர்​கள் வருந்​துகின்​றனர்.

மாநில மற்​றும் மத்​தி​யப் பாது​காப்பு படைகளின் சோதனை​களால் தங்​கள் மீது வெளிப்​படை​யான அவநம்​பிக்​கை​யும் அறிவிக்​கப்​ப​டாத சமூக புறக்கணிப்பு மற்​றும் மிரட்​டல்​களும் இருப்​ப​தாக இவர்​கள் தெரிவிக்​கின்​றனர். மேலும் சில இடங்​களில் உள்​ளூர் கடைகள் தங்​களுக்கு மளி​கைப் பொருட்​களை வழங்க மறுப்​ப​தாக இவர்​கள் கூறுகின்​றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் டெல்​லி​யில் பயிலும் காஷ்மீர் மாணவர்​கள் கூறுகை​யில், ‘‘இது​வரை எங்​களு​டன் நட்​புடன் பழகிவந்த சக மாணவர்​கள் இப்​போது எங்​களை சந்​தேகத்​துடன் பார்க்​கின்​றனர். எங்​களுக்கு தீவிர​வா​தி​களு​டன் தொடர்பு இருக்​கலாம் என அவர்​கள் மறை​முக​மாகப் பேசுவது எங்​கள் காதுக்கு வரு​கிறது. நாங்​கள் குடி​யிருக்​கும் வீட்டு உரிமை​யாளர்​கள் மற்​றும் அண்டை வீட்​டாரின் நடத்​தை​யிலும் எங்​களால் மாற்​றத்தை உணர முடிகிறது. இதனால் நாங்​களும் மற்​றவர்​களைப் போல் இந்​தி​யர்​களாக இருந்​தும் ஒரு​வகை​யில் பாது​காப்​பற்​றவர்​களாக உணர்​கிறோம்” என்று தெரி​வித்​தனர்.

ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் அல் பலா பல்​கலைக்​கழகம் உள்​ளிட்ட கல்வி நிலை​யங்​களில் பயிலும் காஷ்மீர் மாணவர்​கள் சுமார் 2,000 பேர் போலீ​ஸா​ரால் விசா​ரிக்​கப்​பட்​டனர். இந்த விவ​காரத்​தில் ஜம்​மு-காஷ்மீருக்கு வெளியே செயல்​படும் காஷ்மீர் மாணவர் அமைப்பு​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளன.

அதில், ‘‘வட மாநிலங்​களில் உள்ள காஷ்மீர் மாணவர்​கள் ஆங்​காங்கே திடீர் என வெளி​யேற்​றப்​படு​கின்​றனர். விசா​ரணை​களால் பல்​வேறு அச்​சுறுத்​தல்​களை எதிர்​கொள்​கின்​றனர். இந்த கவலைக்​குரிய, ஆபத்​தான போக்கை அகற்​றி, காஷ்மீர் மாணவர்​களின் பாது​காப்​பை​யும் கண்​ணி​யத்​தை​யும்​ உறு​தி செய்​ய வேண்​டும்​’’ என்​று அவர்​கள்​ கோரி​யுள்​ளனர்​.

குண்டுவெடிப்பால் காஷ்மீரிகளுக்கு சிக்கல்: சமூக புறக்கணிப்பு, மிரட்டல் வருவதாக மாணவர்கள் புகார்
ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட‌ வழக்கில் பெங்களூரு போலீஸார் 2 பேரிடம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in