பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

குஜராத்தில் பாஜக, ம.பி.யில் காங்கிரஸ் வெற்றி
பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!
Updated on
2 min read

பாட்னா: பிஹாரின் பங்கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சித் தலை​வர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்​றுள்​ளார். குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் பாஜக​வும், மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸும் வெற்றி பெற்​றுள்​ளன.

பிஹாரின் பங்​கிபூர், குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர், மத்​திய பிரதேசத்தின் டட்​டியா ஆகிய 3 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்றது. இதில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. பிஹாரின் பங்​கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் பாஜக சார்​பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்​பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலை​வர் பிர​சாந்த் கிஷோர் உள்​ளிட்​டோர் போட்டியிட்டனர்.

இந்த தொகு​தி​யின் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது ஆரம்​பம் முதலே பிர​சாந்த் கிஷோர் முன்​னிலை​யில் இருந்​தார். அவர் 64,151 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்​கு​களும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்​பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்​கு​களும் கிடைத்​தன.

இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் கூறும்போது, “குற்​றப்பின்​னணி உடைய ஒரு​வரை பிஹாரின் முதல்​வ​ராக பாஜக தலைமை நியமித்து உள்​ளது. அவரை மாற்​றி​விட்டு நல்ல தலை​வரை, முதல்​வ​ராக நியமிக்க வேண்​டு​கிறேன். பங்​கிபூர் இடைத்​தேர்​தல் மூலம் இந்த கருத்தை மக்​கள் முன்​னிறுத்தி உள்​ளனர்.

எனக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். நல்ல தலைமை கிடைத்​தால் பிஹார் மாநிலம் அதிவேக​மாக முன்​னேறும். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். பிஹார் மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். பங்கிபூர் தொகுதி மக்கள் எங்களது கட்சிக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர்” என்றார்.

பிஹார் முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான சாம்​ராட் சவுத்ரி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பங்​கிபூர் ஜனநாயக திரு​விழா​வில் ஜன் சுராஜ் கட்​சியை மக்​கள் தேர்வு செய்​துள்​ளனர். மக்​களின் முடிவை மதிக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார். குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் ஆளும் பாஜக சார்​பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்றார். காங்​கிரஸ் வேட்​பாளர் பிக்​கா​பாய் ரபாரிக்கு 24,851 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன.

மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் கன்​ஷ்​யாம் சிங் 66,757 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்​கு​கள் கிடைத்​தன.

ஆளும் பாஜக பின்னடைவு ஏன்?

நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக பிஹாரில் நடை​பெற்ற போராட்​டங்​களின்​போது மாணவ, மாண​வியர் மீது போலீ​ஸார் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதனால் ஜென்-ஸி இளைஞர்​களின் வாக்​கு​கள் பாஜக​வுக்கு கிடைக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது.

பிஹார் முதல்​வ​ராக இருந்த நிதிஷ் குமார் கடந்த ஏப்​ரலில் மாற்றப்​பட்​டார். இதனால் அவர் சார்ந்த குர்மி சமு​தாய மக்​கள், பங்​கிபூர் இடைத்​தேர்​தலில் பாஜக​வுக்கு எதி​ராக வாக்​களித்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதுபோன்ற காரணங்​களால் பங்​கிபூர் தொகு​தி​யில் பிர​சாந்த் கிஷோர் வெற்றி பெற்​றுள்​ளார். கடந்த 2025 பிஹார் தேர்​தலில் 238 தொகு​தி​களில் போட்​டி​யிட்​ட ஜன் சுராஜ் ஒரு தொகு​தி​யில்​கூட வெற்றி பெற​வில்​லை. இதில் 3.3% வாக்​கு​கள்​ மட்​டுமே கிடைத்​தன.

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in