பிஹார் பங்கிபூர் இடைத்தேர்தலில் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்: முதன்முறையாக போட்டி

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Updated on
1 min read

பாட்னா: பிஹாரின் பங்கிப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி 2025-ம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டது. அப்போது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்த ஜன் சுராஜ் கட்சி, வெறும் 3.34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

அந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடாதது, அக்கட்சியின் படுதோல்விக்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில்தான், தற்போது பங்கிப்பூர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முதன்முறையாக போட்டியிடுவதாக ஜன் சுராஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரியமான கோட்டையாகத் திகழும் பங்கிப்பூர் தொகுதியில் வென்ற பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், பங்கிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் களமிறங்குவதால், பங்கிப்பூர் தொகுதியில் பாஜக மற்றும் ஜன் சுராஜ் கட்சிக்கு இடையில் நேரடி போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்கிப்பூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ல் நிறைவுபெறும். வாக்குப்பதிவு ஜூலை 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதியும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரசாந்த் கிஷோர்
“முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in