“இது எனக்கு புதிய துறை” - மத்திய கல்வி அமைச்சராக பதவியேற்ற பிரகலாத் ஜோஷி

பிரகலாத் ஜோஷி

பிரகலாத் ஜோஷி

Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​ச​ராக பிரகலாத் ஜோஷி நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார்.

நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்​பில் டெல்​லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்​டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் வினாத் தாள் கசிவால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய கூடாது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.

இதன் ​காரண​மாக கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று முன்​தினம் பதவியை ராஜி​னாமா செய்​தார். புதிய கல்வி அமைச்ச​ராக பிரகலாத் ஜோஷி நியமிக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து டெல்​லி​யில் சேவா தீர்த் அலு​வலக வளாகத்​தில் உள்ள கல்வி அமைச்​சகத்​தில் அவர் நேற்று புதிய கல்வி அமைச்​ச​ராக பதவியேற்​றுக் கொண்​டார்.

பின்​னர் அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: கடந்த சனிக்​கிழமை கர்​நாட​கா​வில் இருந்​தேன். மத்​திய கல்வி அமைச்​ச​ராக நியமிக்கப்​பட்ட உடன் அன்​றிரவே டெல்​லியை வந்​தடைந்​தேன். ஞாயிற்​றுக் ​கிழமை காலை​யில் கல்வி அமைச்​ச​ராக பதவியேற்றுக் கொண்​டேன். இது எனக்கு புதிய துறை. எனவே முதல் ​கட்​ட​மாக அனைத்து அதி​காரி​கள் உடன் முக்​கிய ஆலோசனை​களை நடத்​து​வேன்.

கல்​வித் துறை​யில் இதற்கு முன்பு எடுக்​கப்​பட்ட முக்​கிய முடிவு​கள் குறித்து கேட்​டறிவேன். பிரதமர் நரேந்​திர மோடி என்னை நம்பி மிகப்​ பெரிய பொறுப்பை வழங்கி உள்​ளார். எனவே மிகுந்த கவனத்​துடன் செயல்​படு​வேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நீட் வினாத்​தாள் கசிவு, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்​தாள் திருத்தும் பணி குளறு​படி காரண​மாக மத்​திய கல்​விச் செய​லா​ளர் வினீத் ஜோஷி கடந்த 24-ம் தேதி பணி​யிட மாற்​றம் செய்யப்பட்டார். புதிய கல்​விச் செய​லா​ள​ராக டி.கே. அனில்குமார் நியமிக்​கப்​பட்​டார். மத்​திய கல்​வித் துறை​யின் செயல்​பாடு​கள் குறித்து புதிய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி​யிடம், புதிய செயலாளர் அனில் குமார் விரி​வாக எடுத்​துரைத்​தார்.

இதைத் தொடர்ந்து நீட், ஜேஇஇ உள்​ளிட்ட நுழைவுத் தேர்​வு​களை நடத்​தும் தேசிய தேர்வு முகமை அதி​காரி​களு​டன் அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று மாலை முக்​கிய ஆலோ​சனை நடத்தினார். நுழைவுத் தேர்​வு​களில் மேற்​கொள்ள வேண்​டிய சீர்திருத்​தங்​கள் குறித்து அப்​போது விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

தேசிய தேர்வு முகமை​யில் (என்​டிஏ) இருந்து ஏற்​கெனவே 47 அலுவலர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளனர். அடுத்த ஒரு மாதத்​துக்​குள் என்​டிஏ அமைப்பு முழு​மை​யாக மாற்றி அமைக்​கப்​படும் என்று மத்​திய கல்​வித்​துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

<div class="paragraphs"><p><em>பிரகலாத் ஜோஷி</em></p></div>
“நீட் குற்றவாளியை தூக்கிலிடுங்கள்” - மாணவியின் தாய் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in