அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுரைப்படி அவரது ராஜி​னா​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக் கொண்​டார்.மேலும், பிரதமர் மோடியின் அறி​வுறுத்​தலின்​படி புதிய கல்​வித் துறை அமைச்​ச​ராக பிரகலாத் ஜோஷி நியமிக்​கப்​பட்டு உள்​ளார். இதற்கு குடியரசுத் தலை​வர் முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

தற்​போது நுகர்​வோர் விவ​காரம், உணவு - பொது விநி​யோகம், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி உள்​ளிட்ட துறை​களை பிரகலாத் ஜோஷி கவனித்து வரு​கிறார். அதோடு கல்​வித் துறை​யும் அவருக்கு ஒதுக்​கப்​பட்டு உள்​ளது. கர்​நாட​கா​வின் தார்​வாட் மக்​கள​வைத் தொகுதி எம்.​பி.​யான பிரகலாத் ஜோஷி கடந்த 2019-ம் ஆண்டு முதல் மத்​திய அமைச்​ச​ராக பதவி வகித்​து வருகிறார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு
நாடு முழுவதும் சிஜேபி போராட்டம் எதிரொலி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலகல் - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in