இந்துக்களின் கடையில் பொருட்கள் - மேற்கு வங்கத்தில் சுவரொட்டியால் சர்ச்சை

இந்துக்களின் கடையில் பொருட்கள் - மேற்கு வங்கத்தில் சுவரொட்டியால் சர்ச்சை
Updated on: 
1 min read

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், சிலிகுரி நகரில், இந்துக்கள் நடத்​தும் கடைகளில் பிரி​யாணி, பூஜைப் பொருட்​களை வாங்​க வலி​யுறுத்​தி, ஆர்​எஸ்​எஸ் அமைப்​புடன் தொடர்​புடைய இந்து ஜாகரண் மஞ்ச் அமைப்பு சுவரொட்டி ஒட்​டி​யுள்​ளது. துர்கா பூஜை கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், இந்த சுவரொட்டி சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து அந்த அமைப்​பின் உறுப்​பினர் அபிஷேக் தாஸ் கூறுகை​யில், “இது கட்​டளை அல்ல, ஓர் வேண்​டு​கோள் மட்​டுமே. இந்​துக்​கள் நடத்​தும் வணிக நிறு​வனங்​களுக்கு மக்​கள் ஆதர​வளித்​தால், அது உள்​ளூர் பொருளா​தா​ரத்​தி​லும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்” என்​றார். இந்த நடவடிக்​கைக்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் அசோக் பட்​டாச்​சார்யா எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளார். இந்​தச் சுவரொட்​டிகளை அகற்றுவதுடன், மதரீ​தி​யான பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை​யும் கைது செய்ய வேண்​டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்களின் கடையில் பொருட்கள் - மேற்கு வங்கத்தில் சுவரொட்டியால் சர்ச்சை
இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி லடாக்; சீனா எவ்​வளவு மறுத்தாலும் இது​தான் உண்மை: வெளியுறவு அமைச்சகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in