இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி லடாக்; சீனா எவ்​வளவு மறுத்தாலும் இது​தான் உண்மை: வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி லடாக்; சீனா எவ்​வளவு மறுத்தாலும் இது​தான் உண்மை: வெளியுறவு அமைச்சகம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் பிரிக்க முடி​யாத பகு​தி​யாக லடாக் உள்ளது; சீனா எவ்​வளவு மறுத்​தா​லும் இந்த உறு​திப்​படுத்​தப்​பட்ட உண்​மையை மாற்ற முடி​யாது என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் மீண்​டும் தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

சீன நாட்​டின் எல்​லை​யில் லடாக் யூனியன் பிரதேசம் உள்​ளது. இதனிடையே லடாக்​கின் சில பகு​தி​களை சீனா தங்​கள் நாட்​டுக்கு சொந்​த​மானது என்று கூறி வரு​கிறது. இதற்கிடையே, லடாக் யூனியன் பிரதேசத்​தின் எல்​லை​யில் உள்ள 28 பகு​தி​களுக்கு இந்தியா பெயரைச் சூட்டி​யுள்​ளது. எல்​லை​யில் அமைந்​துள்ள கோக்​ரா, ஹாட் ஸ்பிரிங் என மொத்​தம் 28 பகு​தி​களுக்கு இந்​தியா பெயர் வைத்​துள்​ளது.

இதில் கடந்த 2020-ம் ஆண்டு சீன படை​யுடன் இந்​திய படை​யினர் மோதிய இடமும் அடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில், லடாக் எல்லையில் 28 இடங்​களுக்கு இந்​தியா பெயர் வைத்​ததற்கு சீனா நேற்று கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தை ஒரு​போதும் அங்​கீகரிக்​க​வில்லை என்​றும், அப்​பகு​தி​களுக்​கான இடங்​களின் பெயர்​களை முறைப்​படுத்தி இந்​தியா வெளி​யிட்ட நடவடிக்​கையை சட்​ட​விரோத​மானது மற்​றும் செல்லுபடி​யா​காதது என்​றும் சீனா தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்​கை​யில் கூறிய​தாவது: லடாக் யூனியன் பிரதேசம் இந்​தி​யா​வின் பிரிக்க முடி​யாத பகு​தி​யாகும். சீனா எவ்வளவு மறுத்​தா​லும் உறுதி செய்​யப்​பட்ட இந்த உண்மையை யாராலும் மாற்ற முடி​யாது.

லடாக் யூனியன் பிரதேச நிர்​வாகம் மற்​றும் உள்​ளூர் நிர்வாகிகளுடன் கலந்​தாலோ​சித்​து, இந்​திய நில அளவைத்துறையின் அதி​காரப்​பூர்வ வரைபடத்​தில் லடாக்​கில் 28 இடங்​களின் பெயர்​களை கடந்த 2-ம் தேதி அறி​வித்​தோம். இந்த இடங்​களை துல்​லிய​மாக அடை​யாளம் காண்​பதை எளிதாக்குவதும், அவை குறித்த பொது விழிப்​புணர்வை மேம்படுத்​து​வதுவே இந்த நடவடிக்​கை​யின் நோக்​க​மாகும். இவ்வாறு அவர்​ அதில்​ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி லடாக்; சீனா எவ்​வளவு மறுத்தாலும் இது​தான் உண்மை: வெளியுறவு அமைச்சகம்
மத்திய அமைச்சர், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எல்​.​முருகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in