பல தார மணத்துக்கு தடை: மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி

பல தார மணத்துக்கு தடை: மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு வரும் 23, 29ம் தேதிகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. முதல் கட்டத்தேர்​தலுக்​கான கடைசி கட்​டப் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்​தது.

முன்​ன​தாக டார்​ஜிலிங் மாவட்​டம் சிலிகுரி​யில் நேற்று நடை​பெற்ற பாஜக பிரச்​சார பொதுக் கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா கலந்​து​ கொண்டு பேசி​ய​தாவது: மேற்கு வங்​கத்​தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராள​மானோர் ஊடுரு​வி​யுள்​ளனர். பாஜக ஆட்​சிக்கு வந்​தால், இங்கு ஊடுரு​வலை நிச்​சய​மாக தடுத்து நிறுத்​து​வோம். ஊடுரு​வல்​காரர்​கள் இல்​லாத மாநில​மாக மேற்கு வங்​கத்தை மாற்​று​வோம்.

அதே​போல் நிலங்​களை அபகரிக்​கும் மாபியா கும்​பலை​யும் விரட்டு​வோம். மேலும், புகழ்​ பெற்ற இரும்​புத்​ தாது உற்​பத்​தியை மேம்​படுத்தி மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்​வோம். இதன் ​மூலம் இங்​குள்ள வேலை​யற்ற இளைஞர்​கள் அதிக வேலை ​வாய்ப்பைப் பெறு​வர். மேற்கு வங்​கத்​தில் அமைந்​துள்ள குல்டி பகுதி​தான், நாட்​டிலேயே அதிக இரும்​புத் தாது உற்​பத்தி மையமாக ஒரு காலத்​தில் இருந்​தது.

ஆனால் மம்தா ஆட்​சிக்​காலத்​தில் குல்டி தனது புகழை இழந்​தது. பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மீண்​டும் குல்டி பகு​தியை இரும்​புத்​தாது உற்​பத்தி மைய​மாக மாற்​று​வோம். மேலும், இந்த மாநிலத்​தில் குறிப்​பிட்ட சமூகத்​தில் பலதார திரு​மணங்​கள் இன்​னும் வழக்கத்திலேயே உள்​ளது. அந்த சமூகத்​தினர் 4 திரு​மணங்​கள் வரை செய்​து​ கொள்​கின்​றனர். இதனால் திரு​மண​மான அந்​தப் பெண்​களுக்கு பாது​காப்பு இல்​லாமல் போகிறது. நாங்​கள் ஆட்சிக்கு வந்​தால் பல தார மணத்​தைத் தடை செய்​வோம்​. இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

பல தார மணத்துக்கு தடை: மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in