

பிரத்யா பாசு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான பிரத்யா பாசு நேற்று கொல்கத்தாவில் கூறியதாவது: பாஜக-வுடன் குடும்பத் தொடர்புகளைக் கொண்ட பார்வையாளர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுவதாக நாங்கள் முன்பு கூறியிருந்தோம்.
அதன்படி பங்காவுன் தக்ஷின் தொகுதிக்கான பொதுப் பார்வையாளரான ம.பி.யின் அஜய் கட்டேசாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் சார்புள்ள இவரை தேர்தல் ஆணையம் இங்கு அனுப்பியுள்ளது. இதுபோன்ற அதிகாரிகள் தொழில்முறை பணிகளுக்காக அனுப்பப்படவில்லை. மாறாக தேர்தல் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய அரசியல் சார்புகளை அவர்கள் கொண்டுள்ளதால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பிரத்யா பாசு கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக சுராஜித் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரி மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.