போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

‘இளைஞர்கள் கோரிக்கைகளை புரிந்துகொள்ள வேண்டும்’
போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: போ​ராட்ட களத்​தில் நிலைமை வன்​முறை​யாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்​முறை​யில் ஈடு​ப​டாத​வாறு கவன​மாகச் செயல்பட வேண்​டுமென​வும் அவர்​களின் கோரிக்கைகளை அதி​காரி​கள் புரிந்​து​கொள்ள முயல வேண்டுமென​வும் உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் போராட்ட ஏற்​பாட்​டாளர்​கள் ஆத்​திரமூட்​டும் வகையி​லான பொது அறிக்​கைகளை வெளியிட்டனர். அதன் விளை​வாக ஏற்​பட்ட வன்​முறைக்கு அவர்களே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும், போராட்​டத்தை ஏற்பாடு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி​யும், ஓய்​வு​பெற்ற விமானப்​படை அதி​காரி தாக்​கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்மால்யாபக்​சி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ரிஸ்​வான் அகமது ஆஜராகி, வாதிட்​ட​தாவது: நாடாளு​மன்ற முற்​றுகை பேரணிக்கு காவல் துறை அனு​மதி அளிக்​காத நிலை​யில் தடையை மீறி பேரணி நடை​பெற்​றது. இதில் ஏற்​பட்ட மோதல்​களை தடுக்​க​வும் மாணவர்​கள் மற்​றும் போராட்​டக்​காரர்​களை கலைக்​க​வுமே காவல் துறை​யினர் தடியடி நடத்தினர். நாடாளு​மன்​றத்தை முற்​றுகை​யிடு​வது சாதாரண விஷ​யம் கிடை​யாது.

ஒரு​வேளை இந்த முற்​றுகைப் போராட்​டம் ஒரு கலவர​மாக மாறி துப்​பாக்கி சூடு நடந்​திருந்​தால் யார் பொறுப்​பேற்​பது? இந்​தப் போராட்​டத்​தில் ஏற்​பட்ட அனைத்து குறை​பாடு​களுக்​கும் அனைத்து சம்​பவங்​களுக்​கும் ஏற்​பாட்​டாளர்​களை​் பொறுப்​பேற்க வைக்க வேண்​டும். கல் எறிதல் போன்ற சம்​பவங்​களில் ஈடு​பட்ட சிறு​வர்​களைக் கண்​டறிந்து அவர்​களுக்கு தண்​டனை​யாக சமூக சேவை​யில் ஈடு​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிப​தி​கள் கூறிய​தாவது: ஒரு போராட்​டக் களத்​தில் நிலைமை வன்​முறை​யாக மாறு​வதற்கு முன்​பு, அந்த இளைஞர்​கள் வன்​முறை​யில் ஈடு​ப​டாத​வாறு நாம் கவன​மாகச் செயல்பட வேண்​டும். அவர்​களுக்கு அறி​வுரை கூறி, அமை​திப்​படுத்​து​வதோடு, பிறரின் கருத்​துகளுக்​குச் செவிமெடுப்​பதும் மிகச் சிறந்த விஷ​யம் ஆகும், அந்த வகை​யில், போராடும் இளைஞர்​கள் சொல்​வதைக் கேட்​டு, அவர்​கள் எதற்​காக முழக்​கமிடு​கிறார்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்ள வேண்​டும்.

மேலும், போராட்​டங்​களைக் கையாளும் போது காவல் துறை​யினர் நிதானத்​தைக் கடைப்​பிடிக்க வேண்​டும். ஏதேனும் அசம்​பா​விதம் நிகழ்ந்​தால், சூழ்​நிலை கட்​டுப்​பாட்டை மீறிச் செல்​லாத​வாறு பார்த்​துக் கொள்​வதோடு, அமை​தி​யான போராட்​டங்​களுக்கு வழி​வகுப்​பது முன்​னுரிமை​யாக இருக்க வேண்​டும். இத்​தகைய சம்​பவங்​கள் எங்கு நிகழ்ந்​தா​லும், அவற்றை மிக​வும் கவன​மாகக் கையாள வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்​து, இந்த மனு மீது மத்​திய அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்த நீதிப​தி​கள், இந்த மனுவை போராட்​டம் தொடர்​பாக நிலு​வை​யில்​ உள்​ள பிற மனுக்​களு​டன்​ இணைக்​கு​மாறு உத்​தரவிட்​டனர்​.

போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்: கட்சித் தலைவர்களின் வரவேற்பும்.. விமர்சனமும்..

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in