ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்

தன்னார்வலர் ஜூனைத்

தன்னார்வலர் ஜூனைத்

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: “டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராடிய​வர்​களுக்கு நான் உணவு வழங்கி வந்​தேன்.

கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு நாய் கடிக்​காக ஆர்​எம்​எல் மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்​றுக்​கொண்​டு, என் நண்பருடன் திரும்​பிக் கொண்​டிருந்​த​போது டெல்லி காவலர்​கள் என்று கூறிய சிலர் எங்​களை வழிமறித்து என்னை மட்​டும் பிடித்துச் சென்​றனர்.

இரவு முழு​வதும் என் கண்​களைக் கட்டி வைத்​திருந்​தனர். மறு​நாள் காலை​யில் ஒரு அதி​காரி, “உணவு விநி​யோகத்​துக்கு நிதி எங்கிருந்து வரு​கிறது என்று விசா​ரித்​தார். அதற்​கு, ஆதரவாளர்கள் தரும் நன்​கொடை மூல​மாகவே உணவும் தண்ணீரும் கிடைப்​பதாக நான் பதிலளித்​தேன்.

அதன் பிறகு, என்னை காரில் முசோரிக்​கு கொண்டு சென்று விட்டு​விட்​டனர். சனிக்​கிழமை அங்​கிருந்து டாக்ஸி பிடித்து மீண்டும் வந்து சேர்ந்​தேன். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p><em>தன்னார்வலர் ஜூனைத்</em></p></div>
சிஜேபி போராட்டக்காரர்கள் பற்றி பாஜக எம்.பி. கங்கனா விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in