

பாஜக எம்.பி. கங்கனா
புதுடெல்லி: நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்ட வீடியோக்களை பார்த்தேன். என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு மோசமான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் மொழி மிக கொடூரமாகவும், கீழ்த்தரமாகவும் உள்ளது.
இவர்களை யார் பெற்று வளர்க்கிறார்கள்? இந்தியா அழகான பன்முகத்தன்மை கொண்ட மக்கள், கண்ணியத்துடனும் கலாச்சாரத்துடனும் வாழும் இடம். உங்களை நீங்களே கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக் கொண்டு, அவற்றை போலவே செயல்படுகிறீர்கள். உலகிற்கு உங்கள் குப்பையையும், அசுத்தத்தையும் காட்டுகிறீர்கள்.
உங்களின் வீடியோக்களைப் பார்த்து எனது மனம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள சமூக வலைத் தளங்களிலிருந்து விலகியிருப்பதுதான் நல்லது. வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல் செய்வதற்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையூறு செய்கின்றனர். கல்விச் சீர்திருத்தங்களை அவர்கள் வேண்டுமென்றே தடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.