மாணவிக்கு பாலியல் தொல்லை: மே.வங்க விரிவுரையாளர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: மே.வங்க விரிவுரையாளர் கைது
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கோபர்தங்காவில் உள்ள இந்து கல்லூரி, புவியியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் சந்தீப் தத்தா.

இவர் தனது வகுப்பு மாணவி ஒருவருக்கு இலவசமாக டியூஷன் எடுக்க விரும்புவதாக வீட்டுக்கு மாலையில் தனியாக வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை அந்த மாணவி நிராகரித்துள்ளார். ஆனாலும் சந்தீப் தொடர்ந்து மாணவிக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வீட்டுக்கு வராவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: மே.வங்க விரிவுரையாளர் கைது
டெட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in