கொல்கத்தா வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டங்களுக்கு போலீஸார் தடை

கொல்கத்தா வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டங்களுக்கு போலீஸார் தடை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ​கொல்கத்தா​வில் வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் உள்ள ‘ஸ்ட்​ராங் ரூம்' எனப்​படும் பாது​காப்பு அறை​களில் மின்​னணு வாக்​குப் பதிவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த மையங்​கள் அருகில் சந்​தேகத்​திற்​குரிய நபர்கள் நடமாடுவதாக திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​கள் நேற்று முன்​தினம் குற்​றம் சாட்​டினர்.

முதல்​வர் மம்தா பானர்ஜி தனது பவானிபூர் தொகு​திக்​குட்​பட்ட ஷகாவத் நினைவு பள்ளி வாக்கு எண்​ணிக்கை மையத்​தில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக எழுந்த சந்​தேகத்​தின் பேரில் இங்கு நேரில் வந்து நீண்ட நேரம் அமர்ந்​திருந்​தார். இந்​நிலை​யில் கொல்​கத்​தா​வில் வாக்​கு​கள் எண்​ணப்​படும் 7 பகு​தி​களில் எந்த வகை​யான கூட்​டங்​களுக்​கும் போலீ​ஸார் நேற்று தடை விதித்​தனர். சாஹித் குதி​ராம் போஸ் சாலை, ஜாதவ்​பூர், டயமண்ட் ஹார்​பர் சாலை, லார்ட் சின்ஹா ஹால், நரேஷ் மித்ரா சா​ரணி (பெல்​டலா சாலை) உள்​ளிட்ட 7 இடங்​களில் இந்த தடை அமலில்​ இருக்​கும்​ என போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

கொல்கத்தா வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டங்களுக்கு போலீஸார் தடை
துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in