பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும்: ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் வரவேற்பு

பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும்: ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் வரவேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்​தில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்​பாட்​டைக் குறைத்​தல், தங்​கம் வாங்​கு​வதைத் தள்ளிப்போடு​தல் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களைத் தவிர்த்தல் உள்​ளிட்ட பல்​வேறு கட்​டுப்​பாடு​களைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்​களுக்கு வேண்​டு​கோள் விடுத்​தார்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் அமைப்​பின் தேசிய இணை அமைப்​பாளர் அஸ்​வினி மகாஜன் நேற்று வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமரின் சிக்கன நடவடிக்கை அறி​விப்​பு​கள் என்​பது சுதேசி (உள்​நாட்​டுத் தயாரிப்​பு​களைப் பயன்​படுத்​துதல்) கொள்​கை​யின் மற்​றுமொரு வடிவ​மாகும்.

பெட்​ரோல் மற்​றும் டீசல் நுகர்​வைக் குறைப்​ப​தன் மூலம் அந்​நியச் செலா​வணி சேமிக்​கப்​படு​வதுடன், விநி​யோகச் சங்​கி​லி​யில் ஏற்படும் தடைகளால் உண்​டாகும் தட்​டுப்​பாட்​டை​யும் நாடு திறம்பட எதிர்​கொள்ள முடி​யும். பிரதமரின் இந்த வேண்​டு​கோள் நாட்டு மக்​களின் மனநிலை​யில் ஆழமான தாக்​கத்தை ஏற்படுத்தும். இது பெட்​ரோலியப் பொருட்​களுக்கு மாற்​றாகப் புதிய எரிசக்தி மூலங்​களைக் கண்​டறிய விஞ்​ஞானிகள் மற்​றும் தொழில்​துறை​யினருக்கு உத்​வேகம் அளிக்​கும். இவ்​வாறு மகாஜன்​ கூறி​யுள்​ளார்​.

பிரதமரின் சிக்கன நடவடிக்கை அந்நியச் செலாவணியை பாதுகாக்கும்: ஆர்எஸ்எஸ்-ன் சுதேசி ஜாகரன் மஞ்ச் வரவேற்பு
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in