பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டம்: 6 ஆண்டுகளில் 76 லட்சம் பேருக்கு ரூ.17,800 கோடி கடனுதவி

- மனோகர்லால், மத்திய அமைச்சர்
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டம்: 6 ஆண்டுகளில் 76 லட்சம் பேருக்கு ரூ.17,800 கோடி கடனுதவி
Updated on
2 min read

மனோகர்லால்: இந்​தி​யா​வில் நகரமய​மாக்​கல் என்​பது வெகுவிரை​வாக வளர்ச்​சி​யடைகிறது. 2050-ம் ஆண்​டுக்​குள் நாட்டின் மக்​கள் தொகை​யில் சுமார் 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்​பார்​கள் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. தற்போது நகர்ப்​புற தொழிலா​ளர்​களில் சுமார் 66 சதவீதம் பேர் முறை​சாரா துறை​களில் உள்​ளனர்.

இத்​துறை​களில் பணிபுரிவோரில் பெரும்​பாலானோர் சாலையோர வியா​பாரி​கள் ஆவர். பழங்​கள், காய்​கறிகள், தேநீர், சிற்​றுண்​டிகள், ஆடைகள் என நாள்​தோறும் பயன்​படுத்​தப்​படும் பொருட்​களை விற்​பனை செய்​யும் லட்​சக்​கணக்​கான வியாபாரிகள் பொது​மக்​களின் வாழ்க்​கையை எளி​தாக்​கு​வதுடன் நகர்ப்​புற பொருளா​தா​ரத்​துக்கு பெரும் பங்​களிப்பை வழங்குகின்றனர்.

இவர்​கள் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவர்​களாக இருந்​த​போ​தி​லும், சாலை​யோர வியா​பாரி​களுக்கு முறை​யாக வங்கி கடன் வசதி​கள் கிடைப்​பது குறை​வாக இருந்​தது. இதனால் அவர்​கள் அதிக வட்டி விகிதங்​களைக்கொண்ட முறை​சாரா நிதி ஆதா​ரங்​களையே சார்ந்​திருக்க வேண்டி​யிருந்​தது. இதன் காரண​மாக அவர்​கள் தங்களின் வரு​வா​யின் பெரும் பகு​தியை கடன் தவணைகள் செலுத்​து​வ​திலேயே செல​விட வேண்​டி​யிருந்​தது. 2020-ம் ஆண்​டில் ஏற்​பட்ட கரோனா பெருந்​தொற்று அவர்​களு​டைய வணி​கங்​களை மிக​வும் பாதிப்பு அடையச் செய்​தது.

இதையடுத்து பிரதமர் மோடி​யின் தொலைநோக்​குப் பார்வை கொண்ட தலை​மை​யின் கீழ், சாலை​யோர வியா​பாரி​கள் தற்சார்பு நிதி திட்​டம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்​பட்​டது. இது சாலை​யோர வியா​பாரி​களுக்​காக தொடங்​கப்​பட்ட முதலா​வது விரி​வான குறுங் கடன் திட்​ட​மாகும். இது அவர்​களுக்கு முறை சார்ந்த வழிகளில் நிதி வசதியை ஏற்படுத்தி தந்​தது.

இந்த திட்​டத்​தின் கீழ், வங்​கி​களும், நிதி நிறு​வனங்​களும் ரூ.15,000, ரூ.25,000, ரூ.50,000 என 3 தவணை​களாக பிணை​யில்லா கடன்களை வழங்​கு​கின்​றன. கடன்​களை உரிய நேரத்​தில் திருப்பி செலுத்​து​வதை ஊக்​குவிக்​கும் வகை​யில் தவணை​களை தவறாமல் செலுத்​தும் பயனாளி​களுக்கு 7 சதவீத வட்டி மானி​யம் வழங்​கப்​படு​கிறது. கடந்த 6 ஆண்​டு​களில் பிரதமரின் சாலையோர வியா​பாரி​கள் தற்​சார்பு நிதித் திட்​டத்​தின் மூலம் சுமார் 76 லட்​சம் சாலை​யோர வியா​பாரி​கள் பயன் பெற்றுள்ளனர். அவர்​களுக்கு ரூ. 17,800 கோடிக்​கும் அதி​க​மான கடன் வழங்கப்​பட்​டுள்​ளது.

பிரதமரின் சாலை​யோர வியா​பாரி​கள் தற்​சார்பு நிதித் திட்​டம், வெறும் கடன்​களை வழங்​கு​வது மட்​டுமின்​றி, அவர்​களுக்கு கண்ணி​யம், அங்​கீ​காரம், புதிய வாய்ப்​பு​களை​ பெற்​றுத் தரும் வலிமைமிக்க கரு​வி​யாக உரு​வெடுத்​துள்​ளது. இத்​திட்​டத்​தின் மற்றொரு அம்​ச​மாக யுபிஐ, கியூஆர் குறி​யீடு அடிப்​படையி​லான மின்​னணு பணப் பரிவர்த்​தனை​களை ஊக்​கு​விப்​ப​தற்கு பணத்தை திரும்ப பெறக்​கூடிய ஊக்​கத்​தொகை முறை அறிமுகப்படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த முன்​முயற்​சி​யின் மூலம் 55 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வியாபாரி​கள் மின்​னணு பொருளா​தா​ரத்​துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்​களு​டைய பரிவர்த்​தனை​களை வெளிப்​படை​யான​தாக​வும், நிதி நம்​பகத்​தன்​மையை வலுவானதாக​வும் மாற்​றி​யுள்​ளது. பிரதமரின் சாலை​யோர வியாபாரி​கள் தற்​சார்பு நிதித் திட்​டம் மூலம் பயனாளி​களும், அவர்​களது குடும்​பத்​தினரும் 8 முக்​கிய நலவாழ்வு திட்​டங்களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இது​வரை 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட சாலை​யோர வியாபாரிகளின் குடும்​பத்​தினர் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். இத்திட்​டங்​களால் 1.52 கோடிக்​கும் அதி​க​மான பலன்​கள் அவர்களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. ஓய்​வூ​தி​யம், காப்​பீடு, சுகாதாரம், சமூகப் பாது​காப்பு பலன்​கள் பெறு​வதை எளி​தாக்குவதன் மூலம் இத்​திட்​டம், சாலை​யோர வியா​பாரி​களுக்​கும், அவர்​களது குடும்​பத்​தினருக்​கும் ஒரு விரி​வான சமூகப் பாதுகாப்பு அமைப்​பாக உள்​ளது.

- கட்​டுரை​யாளர்: மத்​தி​ய வீட்​டு வசதி, நகர்ப்​புற மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர்​

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டம்: 6 ஆண்டுகளில் 76 லட்சம் பேருக்கு ரூ.17,800 கோடி கடனுதவி
‘மக்கள் மேடை’ - புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in