

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தரமான, மலிவான மருத்துவ வசதியை உறுதி செய்யும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் இனி மேற்கு வங்க மாநில மக்களுக்கு தடையின்றி கிடைக்கும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
அதே வேளையில், அங்குள்ள இரட்டை இன்ஜின் அரசு, மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.