தென்கொரிய அதிபர் மியுங் - பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு வர்த்தகத்தை ரூ.4.6 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

Updated on
1 min read

புதுடெல்லி/சியோல்: இந்​தி​யா​வுக்​கும் தென்​கொரி​யா​வுக்கும் இடையி​லான இருதரப்பு வர்த்​தகத்தை வரும் 2030-க்​குள் 5,000 கோடி டால​ராக (சு​மார் ரூ. 4.6 லட்​சம் கோடி) இரட்​டிப்​பாக்க இரு நாடு​களும் உறுதி பூண்​டுள்​ளன. தென்​கொரிய அதிபர் லீ ஜே மியுங், மூன்று நாள் அரசு​முறைப் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார்.

எட்டு ஆண்​டு​களுக்​குப் பிறகு தென்​கொரிய அதிபர் ஒரு​வர் இந்​தியா வரு​வது இதுவே முதல்​முறை​யாகும். பிரதமர் மோடி​யுடன் அவர் நேற்று நடத்​திய ஆலோ​சனை​களுக்​குப் பிறகு, பொருளா​தார உறவு​களில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யுள்​ள​தாக இரு நாட்டு தலை​வர்​களும் அறி​வித்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அதிபர் லீ ஜே மியுங் கூறும்போது, ‘‘இரு நாடு​களின் பொது​வான வளர்ச்​சியை நோக்​க​மாகக் கொண்​டு, பொருளா​தார ஒத்​துழைப்​புக்​கான புதிய கட்​டமைப்பை உரு​வாக்க முடிவு செய்​துள்​ளோம். இதற்​காக முதன்​முறை​யாக அமைச்​சர் அளவி​லான பொருளா​தார ஒத்​துழைப்பு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, அணுமின் நிலை​யங்​கள் மற்​றும் பசுமை எரிசக்தி துறை​களில் முதலீடு​கள் பலப்​படுத்​தப்​படும்’’ என்றார். பிரதமர் மோடி பேசுகை​யில், ‘‘அதிபர் லீ-​யின் வருகை மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது.

தற்​போது 2,700 கோடி டால​ராக உள்ள இருதரப்பு வர்த்​தகத்தை அடுத்த நான்கு ஆண்​டு​களில் ரூ.4.6 லட்சம் கோடியாக உயர்த்த முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. பல நூற்​றாண்​டு​களுக்கு முந்​தைய கலாச்​சா​ரத் தொடர்​பு​களைக் கொண்ட நாம், அடுத்த பத்​தாண்டு கால வெற்​றிக்​கான அடித்​தளத்தை இன்று அமைத்​துள்​ளோம்’’ என்​றார்.

<div class="paragraphs"><p>இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.</p></div>
“உங்களில் ஒருவர் வேண்டுமா? நாடகம் நடிப்பவர் வேண்டுமா?” - பெரம்பூரில் ஸ்டாலின் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in