வாராணசியில் விமானப் படை சாகசத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி

வாராணசியில் விமானப் படை சாகசத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி
Updated on: 
1 min read

வாராணசி: இந்​திய விமானப் படை​யின் 94-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உ.ப.யின் வாராணசி​யில் நமோகாட் பகுதியில் ‘விங்ஸ் ஓவர் கங்கை’ என்ற சாகச நிகழ்ச்​சிகள் கடந்த 3 நாட்​களாக நடை​பெற்​றன.

இறுதி நாளான நேற்று நடை​பெற்ற விமானப் படை​யின் முக்கியசாகசக் குழு​வினரின் வான்​வழி சாகசங்​களை பிரதமர் நரேந்​திர மோடி பார்​வை​யிட்​டார். அப்​போது பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உத்​தர பிரதேச ஆளுநர் ஆனந்​திபென் படேல், முதல்​வர் யோகி ஆதித்​யநாத் ஆகியோர் உடனிருந்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், சுகோய்-30 எம்​கேஐ, உள்​நாட்​டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் மற்​றும் எல்​சிஎச் பிரசந்த் உள்​ளிட்ட போர் விமானங்​களும், ஹெலிகாப்​டர்​களும் சாகசங்​களை நிகழ்த்​தின. மூன்று கிரண் விமானங்​கள் ‘V’ வடிவத்​தில் பறந்து தேசி​யக் கொடியின் வர்​ணங்​களில் கண்​கவர் காட்​சியை உரு​வாக்​கின.

அதேநேரம் தேசி​யக் கொடியைத் தாங்​கிய எம்ஐ-17 ஹெலிகாப்டர்​கள் ஓம்​கார் வடிவத்​தில் பங்​கேற்​றன. சூர்ய கிரண் வான்​வழி சாகசக் குழு துல்​லிய​மான பறத்​தல் மற்​றும் ஒருங்கிணைந்த தந்திரங்​களை வெளிப்​படுத்​தி​யது. அதேநேரம் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு தனது வான்​வழி சாகசங்​களால் பார்​வை​யாளர்​களைக் கவர்ந்​தது.

வாராணசியில் விமானப் படை சாகசத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி
அகமதாபாத்தில் உலக சீனியர் பளுதூக்குதல் போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in