“உள்நாட்டு பொருட்களை மட்டும் பண்டிகை நாட்களில் வாங்குங்கள்” - பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: ‘‘பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அதன்படி 139-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று வானொலியில் ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில் மனதின் குரலை தொடங்கினோம். என்னைப் பொறுத்த வரை இந்த வானொலி நிகழ்ச்சியைப் புனித யாத்திரையாகவே கருதுகிறேன்.

இயற்கையைப் போற்றி வணங்குவது நமது பாரம்பரியம். இதன்படி உத்தராகண்டின் டிஹ்ரி கட்வால் பகுதி மக்கள், ஹேவல் நதியைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினர். நதி தூர்வாரப்பட்டு ஹேவல் நதி புத்துயிர் பெற்றிருக்கிறது.

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா இயக்கம், மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சுதேசிப் பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த காந்தி ஜெயந்தி நாளில்

காதி பொருட்களின் விற்பனை ரூ.28 கோடியைத் தாண்டியது. வரும் பண்டிகை நாட்களில் காதி பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க வேண்டுகிறேன்.

இ-சஞ்ஜீவினி திட்டம்: மத்திய அரசின் இ - சஞ்ஜீவினி தொலைநிலை மருத்துவ சேவை திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 50 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து தீபாவளி, சாத் பண்டிகைகளைக் கொண்டாட உள்ளோம். இந்தப் பண்டிகைகளுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி | கோப்புப்படம்</p></div>
இன்று புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ - ஆந்திராவில் அக்.28-ல் கரை கடக்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in