ஆக.31-ல் கிர்கிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்து பேச திட்டம்
ஆக.31-ல் கிர்கிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர். நாளை​யும் நாளை மறு​தின​மும் பிரதமர் நரேந்​திர மோடி தாஷ்கண்​டில் தங்​கி​யிருக்​கிறார்.

வரும் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​குக்கு அவர் செல்​கிறார். அங்கு ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு ஆகஸ்ட் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். எஸ்சிஓ அமைப்​பில் சீனா, ரஷ்​யா, கஜகஸ்​தான், கிர்​கிஸ்​தான், தஜிகிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், இந்​தி​யா, பாகிஸ்​தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.

இந்த நாடு​களின் தலை​வர்​கள் உச்சி மாநாட்​டில் பங்கேற்கின்றனர். கடந்த 2025-ம் ஆண்டு சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​குடன் அவர் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்தி​னார்.

தற்​போது கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

இந்த மாநாட்​டின்​போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உள்​ளிட்​டோரை பிரதமர் நரேந்​திர மோடி சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வரும் செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் டெல்​லி​யில் பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் உச்சி மா​நாடு நடை​பெறுகிறது. இதற்கு முன்​னோட்​ட​மாக எஸ்​சிஓ உச்சி மா​நாடு அமை​யும் என்​று அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஆக.31-ல் கிர்கிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியா? - நேபாள வெள்ளமும், சீனாவின் ‘மெகா அணை’ அச்சுறுத்தலும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in