

புதுடெல்லி: எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற விருதை
அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கி கவுரவித்தார். அதன்பின், நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி கைதட்டி ரசித்தார்.
விருது பெற்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். இது அவருடைய தலைமையின் கீழ் உலகளாவிய ராஜதந்திரத்தில் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்து வருவதைக் குறிக்கிறது’’ என கூறியுள்ளார்.