ஓலா, ஊபர், ராபிடோவுக்கு மாற்றாக டெல்லியில் ஜனவரி 1 முதல் பாரத் டாக்ஸிகள்

ஓலா, ஊபர், ராபிடோவுக்கு மாற்றாக டெல்லியில் ஜனவரி 1 முதல் பாரத் டாக்ஸிகள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஓலா, ஊபர், ராபிடோவுக்கு மாற்​றாக டெல்​லி​யில் ஜனவரி 1 முதல் பாரத் டாக்​ஸிகள் இயக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் கூட்​டுறவு வாடகை கார் சேவை​யான 'பாரத் டாக்​ஸி’ ஜனவரி 1-ம் தேதி மத்​திய அரசால் டெல்​லி​யில் தொடங்​கப்பட உள்​ளது.

டெல்லி மக்​களுக்கு ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவைக்கு மாற்​றாக அல்​லது கூடு​தல் சேவை​யாக இது இருக்​கும். இதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் நிறைவடைந்​து​விட்​டன, சஹகார் டாக்ஸி கூட்​டுறவு நிறு​வனத்​தால் இந்த செயலி இயக்​கப்​படும். இந்த சேவை மூலம் கார், ஆட்டோ ரிக் ஷா மற்​றும் பைக்​கு​கள் கிடைக்​கும். இது ஆண்ட்​ராய்டு மற்​றும் ஐஓஎஸ் இயங்கு தளம் கொண்ட செல்​போன்​களில் கிடைக்​கும்.

பயணி​கள் தங்​கள் மொபைல் எண்​ணைப் பதிவு செய்​து, தாங்​கள் புறப்​படும் மற்​றும் இறங்க வேண்​டிய இடங்​களை உள்​ளிட்​டு, பயணத்தை தொடங்​கலாம். மேலும் பயணத்தை நிகழ்​நேரத்​தில் கண்​காணிக்​கலாம்.

டெல்லி காவல் ​துறை மற்​றும் பிற முகமை​களு​டன் ஒருங்​கிணைப்​பு, சரி​பார்க்​கப்​பட்ட ஓட்​டுநர்​களை பணி​யமர்த்​துதல், பயண விவரங்​களை பகிர்ந்​து​கொள்​ளும் வசதி என பாது​காப்பு அம்​சங்​களை இது கொண்​டிருக்​கும்.

இந்த செயலி பயன்​படுத்த எளி​தானது. வெளிப்​படை​யான கட்டண அமைப்​பு, பல மொழிப் பயன்​பாடு, 24 மணி நேர வாடிக்​கை​யாளர் சேவை போன்ற அம்​சங்​களைக் கொண்​டுள்​ளது.

நெரிசல் நேரங்​களில் ஓட்​டுநர்​கள் கட்​டுப்​பாடு இல்​லாமல் கட்​ட​ணங்​களை உயர்த்த முடி​யாது. ஓட்​டுநர்​கள் பயணத்தை மறுப்​பது, முன்​ப​திவை ரத்து செய்​வது போன்ற அன்​றாடப் புகார்​களை கையாள​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

பாரத் டாக்ஸி செயலி, ஓட்​டுநர்​களுக்​குச் சொந்​த​மான கூட்​டுறவு அமைப்பை அடிப்​படை​யாகக் கொண்​டது. இதனால் ஓட்​டுநர்​களுக்கு அதிக வரு​மானம் மற்​றும் சிறந்த பணிச்​சூழல் கிடைக்​கும். ஓட்​டுநர்​கள் கட்​ட​ணத்​தில் 80 சதவீதம் வரை நேரடி​யாகப் பெறு​வார்​கள். இதற்​காக ஒரு மாதாந்​திர கடன் அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

பாரத் டாக்ஸி செயலி​யில் 56,000 ஓட்​டுநர்​கள் பதிவு செய்​துள்​ளனர். டெல்​லி​யில் சோதனை ஓட்​டம் நிறைவடைந்​துள்​ளது. குஜ​ராத்​தின் ராஜ்கோட்​டில் இதே​போன்ற சோதனை நடை​பெற்று வரு​கிறது. அங்கு பிப்​ர​வரி 1-ம் தேதி இது தொடங்​கப்பட வாய்ப்​புள்​ளது. இது படிப்​படி​யாக 20-க்​கும் மேற்​பட்ட நகரங்​களுக்கு விரிவுபடுத்​தப்​படும்​. இவ்​வாறு அதி​காரி​கள்​ கூறினர்​.

ஓலா, ஊபர், ராபிடோவுக்கு மாற்றாக டெல்லியில் ஜனவரி 1 முதல் பாரத் டாக்ஸிகள்
கோபத்தில் எல்லை தாண்டி இந்தியா நுழைந்தார் பாகிஸ்தான் பெண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in