செயற்கைக் கால்களைக் காட்டி அரசியல் வன்முறை பற்றி பேசிய கேரள எம்.பி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

செயற்கைக் கால்களைக் காட்டி அரசியல் வன்முறை பற்றி பேசிய கேரள எம்.பி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நியமன எம்​.பி. சதானந்​தன் மாஸ்​டர். கேரள பாஜக துணைத் தலை​வ​ராக இருக்​கும் இவர், கேரளா​வில் ஆசிரிய​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். கண்ணூர் மாவட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் இயக்​கத்​தில் தீவிர​மாக செய​லாற்​றிய இவரை, மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் 1994-ம் ஆண்டு கடுமை​யாக தாக்​கியதில் 2 கால்​களை​யும் இழந்து செயற்​கைக் கால்​களைப் பொருத்​தி​யுள்​ளார்.

இவர் கடந்த வாரம் மாநிலங்​களவை​யில் முதல் முறை​யாக பேசி​னார். அப்​போது தனது செயற்​கைக் கால்​களைக் கழற்றி மேசை​யின் மீது வைத்து ஜனநாயகம் குறித்து பேசி​னார். இதுகுறித்து அவருக்கு கடந்த 6-ம் தேதி எழு​திய கடிதத்​தில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது:

உங்​கள் தைரி​யத்தை கேரளா நன்​கறி​யும். பிற்​போக்​குக் கொள்கை உடைய​வர்​கள் நடத்​திய தாக்​குதலால் பாதிக்​கப்​பட்​டோர் நாட்​டில் பலர் உள்​ளனர். நீங்​கள் அமை​தி​யான முறை​யில் உங்​கள் கருத்​துக்​களை முன்​வைத்​ததைப் பாராட்​டு​கிறேன். நீங்​கள் நாடு தான் முதலில் என்ற உறுதி மற்​றும் கொள்​கையை கொண்டு வந்​துள்​ளீர்​கள். செயற்​கைக் கால்​களை நீங்​கள் மேசை​யில் கழற்றி வைத்து பேசி​யதை பார்த்​து, இந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், நாட்டு மக்​களும் அதிர்ச்சி அடைந்​தனர்.

உங்​களது பேச்​சை​யும் சில எம்​.பி.க்​கள் கேலி செய்​தனர். தற்​போது பிற்​போக்கு கொள்​கைகள் வெகு​வாக குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. திரு​வனந்​த​புரத்​துக்கு நான் சமீபத்​தில் வந்த போது கேரள மக்​கள் எனக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

இது கேரளா​வில் ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்) மற்​றும் இடது​சாரி ஜனநாயக முன்​னணியின் செயல்​பாடு​களால் மக்​கள் வெறுப்​படைந்​துள்​ளதை காட்​டு​கிறது.

அவர்​கள் வளர்ச்​சி​யடைந்த கேரளம் என்ற நமது தொலைநோக்கு பார்​வையைப் பாராட்​டு​கின்​றனர். மத்​திய பட்​ஜெட், கேரளா​வுக்கு குறிப்​பிடத்​தக்க வகை​யில் பயனளிக்​கும் என்​ப​தால், நீங்​கள் மகிழ்ச்​சி​யுடன் இருப்​பீர்​கள். இவ்​வாறு பிரதமர்​ கூறி​யுள்​ளார்​.

செயற்கைக் கால்களைக் காட்டி அரசியல் வன்முறை பற்றி பேசிய கேரள எம்.பி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது: தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in