சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி: சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்

சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி: சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்​ஸ்​டாகி​ராமில் வெளி​யிட்​டார். அவர் வெளியிட்ட பதி​வில், “எனது வீட்​டுக்கு வந்த சின்​னஞ்​சிறு நண்பனுடன்​...” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அந்த புகைப்​படம் வைரலாகப் பரவி வரு​கிறது.

பிரதமர் மோடியுடன் இருக்​கும் சின்​னஞ்​சிறு நண்​பன் யார் என்ற கேள்வி அனை​வரை​யும் துளைத்​தெடுத்​தது. நீண்ட தேடலுக்​குப் பிறகு அந்த சிறு​வன் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிருஷ்ணகு​மாரின் பேரன் நியோம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகு​மார் தனது குடும்​பத்​துடன் பிரதமர் மோடியை சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது கிருஷ்ணகு​மாரின் மகள் தியா தனது மகன் நியோமுடன் பிரதமரை சந்​தித்​தார். குழந்​தைகள் மீது அதிக பாசம் கொண்ட பிரதமர் மோடி, நியோமை தூக்கி கொஞ்சி மகிழ்ந்​தார். அந்த புகைப்​படத்​தையே அவர் தனது வெளியிட்டிருக்கிறார். தியா​வும் அவரது கணவர் அஸ்​வினும் கேரளா​வின் பிரபல யூ டியூபர்​களாக உள்​ளனர்.

தனது கர்ப்​பம் முதல் பிரசவம் வரையி​லான முழு பயணத்​தை​யும் யூ டியூப் சேனலில் தியா ஆவணப்​படுத்​தி​யிருக்​கிறார். கடந்த ஆண்டு செப்​டம்​பரில் தனது குழந்​தை​யின் முகத்தை யூ டியூபில் மக்​களுக்கு அவர் அறி​முகம் செய்​தார். தற்​போது பிரதமர் நரேந்திர மோடி​யால் குழந்தை நியோம் உலகம் முழு​வதும் பிரபலமாகி​விட்​டான்​.

சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி: சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in