அசாம் நெடுஞ்சாலையில் ரூ.100 கோடியில் ஓடுதளம்: ராணுவ விமானத்தில் தரையிறங்கிய மோடி

ரூ.5,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்​டங்​களையும் தொடங்கி வைத்​தார்
பிரதமர் மோடி வந்த சி-130ஜே ராணுவ விமானம், திப்ரூகர் நெடுஞ்சாலையில் தரையிறங்குகிறது. (அடுத்த படம்) விமானத்தில் இருந்து வெளியே வரும் பிரதமர்.

பிரதமர் மோடி வந்த சி-130ஜே ராணுவ விமானம், திப்ரூகர் நெடுஞ்சாலையில் தரையிறங்குகிறது. (அடுத்த படம்) விமானத்தில் இருந்து வெளியே வரும் பிரதமர்.

Updated on
2 min read

திப்ரூகர்: அவசர காலத்தில் எளிதாக தரையிறங்கும் விதமாக அசாமில் உள்ள நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக ஓடுபாதையில், பிரதமர் மோடி நேற்று ராணுவவிமானத்தில் சென்று தரையிறங்கினார். அவசரகால பயன்பாட்டுக்காக ஓடுதளத்தை தொடங்கி வைத்து, ரூ.5,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அவசர காலங்​களில் விமானப்​படை விமானங்களை உடனடியாக தரையிறக்கி, மீட்பு பணி​களை எளி​தில் மேற்​கொள்ளும் நோக்கில், அசாம் மாநிலம் திப்​ரூகர் நகரின் மொரன் நெடுஞ்​சாலை​யில் 4.2 கி.மீ. தூரத்​துக்கு அவசர​கால விமான ஓடு​தளம் (இஎல்​எப்) ரூ.100 கோடி செல​வில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி​களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று அசாமுக்கு வந்தார்.

சாபுவா விமானப்​படை தளத்​துக்கு வந்த பிரதமரை அசாம் ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்​சார்​யா, முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனோ​வால் ஆகியோர் வரவேற்​றனர். பின்னர், அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜே ரக போக்​கு​வரத்து விமானத்​தில் பிரதமர் மோடி பயணம் செய்​தார். திப்​ரூகரின் மொரன் நெடுஞ்​சாலை​யில் புதிதாக அமைக்​கப்​பட்டுள்ள அவசர​கால விமான ஓடு​தளத்​தில் அந்த விமானம் தரை​யிறங்கியது.

இதையடுத்து, அவசரகால பயன்பாட்டுக்காக ஓடுதளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, 40 நிமிடங்கள் நடைபெற்ற போர் விமானங்​களின் சாகச நிகழ்ச்​சியையும் பார்​வை​யிட்​டார். சுகோய், ரஃபேல், தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் மொரன் நெடுஞ்​சாலை​யில் தரை​யிறங்​கி, புறப்​பட்டுச் சென்​றன.

சீனாவுக்குப் போட்டியாக.. சீனா தனது எல்லைப் பகுதியில் 7 விமானப்படை தளங்களை அமைத்துள்ளது. இதற்கு போட்டியாக இந்தியாவும் எல்லை அருகே ஹசிமரா, தேஜ்பூர், ஜோர்ஹாட், சாபுவா ஆகியபகுதிகளில் விமானப்படை தளங்களை அமைத்துள்ளது. போர் சூழலில், பெரும்பாலும் விமானப்படைத் தளங்கள் குறிவைத்து தாக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, அசாமில் உள்ள நெடுஞ்சாலையில் அவசரகால விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ள​தாவது: அவசர​கால பயன்​பாட்​டுக்காக நெடுஞ்​சாலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்த விமான ஓடு​தளம் மிக முக்​கிய​மானது. மொரன் பைபாஸ் சாலை​யில் 4.2 கி.மீ தூரத்​துக்கு ரூ.100 கோடி செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்த ஓடு​தளம், விமானப்​படை பயன்​பாடு மற்​றும் மீட்பு நடவடிக்​கைகளுக்கு உதவும். திப்​ரூகர் விமான நிலை​யத்​தில் அவசரநிலை ஏற்​பட்​டாலும், இந்த ஓடு​தளத்தைப் பயன்​படுத்திக் கொள்​ளலாம்.

74 டன் விமானங்கள்: இதில் 40 டன் எடை​யுள்ள போர்விமானம், மற்​றும் 74 டன் எடை​யுள்ள போக்​கு​வரத்து விமானங்​கள் தரை​யிறங்​கி, புறப்பட்டுச் செல்ல முடி​யும். நாட்டின் முதல் அவசர​கால விமான ஓடு​தளம் ராஜஸ்​தான் மாநிலம் பார்​மர் மாவட்​டத்​தில் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இவ்​வாறு பிரதமர் தெரிவித்துள்​ளார்.

பின்னர், சி-130ஜே விமானத்​தில் பிரதமர் மோடி குவாஹாட்டி புறப்​பட்டுச் சென்​றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்​வேறு வளர்ச்சித் திட்​டங்களை தொடங்கி வைத்​தார். குவாஹாட்டி - வடக்கு குவாஹாட்​டியை இணைக்கும் வகை​யில் பிரம்​மபுத்ரா நதி​யின் குறுக்கே ரூ.3,030 கோடியில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள ‘குமார பாஸ்கரவர்மா’ பாலத்​தை​யும் பார்​வை​யிட்​டார். இது நிலநடுக்​கம் ஏற்​படும் பகுதி என்​பதால், அதிர்​வு​களைத் தாங்​கும் தொழில் நுட்​பத்​தில் இந்த பாலம் கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த பாலம் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். காமாக்யா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பயணத்தையும் எளிதாக்கும்.

குவாஹாட்டியின் லசிட் காட்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,450 கோடி மதிப்​பிலான வளர்ச்சித் திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். டிஜிட்​டல் இந்​தியா திட்​டத்​தின் கீழ் கம்​ருப் மாவட்​டத்​தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தரவு மையம், குவாஹாட்​டி​யில் இந்​திய மேலாண்மை மையத்​தின் தற்காலிக மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிஎம்​-இ-பேருந்து சேவா திட்​டத்​தின்கீழ்225 மின்​சார பேருந்​துகளை​யும் பிரதமர் தொடங்​கி வைத்​தார். பின்னர், கா​னா​பாராவில்​ நடந்தபாஜக கூட்​டத்​தில் உரையாற்றினார்.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி வந்த சி-130ஜே ராணுவ விமானம், திப்ரூகர் நெடுஞ்சாலையில் தரையிறங்குகிறது. (அடுத்த படம்) விமானத்தில் இருந்து வெளியே வரும் பிரதமர்.</p></div>
கீழடியில் ரூ.24 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in