சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 3,000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 3,000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் நாளை (ஜன.12) நடை​பெறும் விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் 3,000-க்​கும் மேற்​பட்ட இளைஞர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி உரை​யாட உள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சுவாமி விவே​கானந்​தரின் பிறந்​த​நாளை நினை​வு​கூரும் தேசிய இளைஞர் தினத்தை முன்​னிட்டு 'விக்​சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்​தி​யா) இளம் தலை​வர்​கள் உரை​யாடல் 2026' நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்​டபத்​தில் ஜனவரி 9-ம் தேதி தொடங்​கியது.

இதன் இறுதி அமர்வு ஜனவரி 12-ம் தேதி (நாளை) நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களை சேர்ந்த 3,000-க்​கும் மேற்​பட்ட இளைஞர்​களு​டன் கலந்​துரை​யாட உள்​ளார். விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் கலந்​துரை​யாடல் 2026- பதிப்​பில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பங்​கேற்​பாளர்​கள் பிரதமரிடம் 10 கருப்​பொருள் பிரிவு​களில் தங்​கள் எண்​ணத்தை வெளிப்​படுத்​து​வார்​கள்.

தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த துறை​களில் தங்​கள் கண்​ணோட்​டங்​கள் மற்​றும் செயல்​படுத்​தக்​கூடிய யோசனை​களை பகிர்ந்​து​கொள்​வார்​கள். இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்​கான முன்​னுரிமை​கள் மற்​றும் தேசத்தை கட்​டி​யெழுப்​புவதற்​கான நீண்​ட​கால இலக்​கு​கள் குறித்து இளம் பங்​கேற்​பாளர்​களால் எழுதப்​பட்ட தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கட்​டுரைகளை கொண்ட ‘விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் கலந்​துரை​யாடல் 2026-க்​கான கட்​டுரைத் தொகுப்​பை’ பிரதமர் வெளி​யிடு​வார்.

‘விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல்’ என்​பது இந்​தி​யா​வின் இளைஞர்​களுக்​கும் தேசிய தலை​மைக்​கும் இடையி​லான ஒரு கட்​டமைக்​கப்​பட்ட கலந்​துரை​யாடலை எளி​ தாக்​கு​வதற்​காக வடிவ​மைக்​கப்​பட்ட ஒரு தேசிய தளமாகும்.

பிரதமர் நரேந்​திர மோடியின் சுதந்​திர தின உரை​யின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 3,000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
முஸ்லிம் அல்லாத இருவரை சேர்க்காததால் மாநில வக்பு வாரியம் செயல்பட நீதிமன்றம் தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in