சிக்கிமில் ரூ.4,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சிக்கிமில் ரூ.4,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Updated on
2 min read

காங்டாக்: சிக்​கிம் தலைநகர் காங்​டாக்​கில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்​கி​வைத்​தார். பல்​வேறு திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

இரு நாட்​கள் பயண​மாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்தினம் மாலை சிக்​கிம் தலைநகர் காங்​டாக் சென்​றார். அங்கு நேற்று காலை நடந்த சிக்​கிமின் 50-வது ஆண்டு விழா​வில் அவர் பங்​கேற்​றார். அப்​போது சிக்​கிமின் நம்சி மாவட்​டம், யான்​காங் நகரில் 100 படுக்கை வசதி​கள் கொண்ட ஆயுர்​வேத மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி காணொலி வாயி​லாக அடிக்கல் நாட்​டி​னார்.

டியோரலி நகரில் 30 படுக்கை வசதி​கள் கொண்ட மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு உள்​ளது. அந்த மருத்​து​வனையை பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். சிக்​கிமின் சிர்​வாணி, லோவர் சாம்​டங் பகுதி​களில் தீஸ்தா நதி​யின் குறுக்கே புதி​தாக பாலங்​கள் கட்ட அவர் அடிக்​கல் நாட்​டி​னார். ஒட்​டுமொத்​த​மாக ரூ.4,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார், பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: மேற்​கு​ வங்க தேர்​தல் பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​துவிட்டு கடந்த திங்​கள் ​கிழமை மாலை காங்​டாக்​கில் தரை​யிறங்​கினேன். சிக்​கிம் மண்ணில் கால் பதித்​ததும் புத்​துணர்​வைப் பெற்​றேன். மாநிலத்தின் இயற்கை அழகு அனை​வரை​யும் கவர்ந்​திழுக்​கிறது. காங்​டாக்​கின் அனைத்து சாலைகளும் தூய்​மை​யாக காட்சியளிப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது.

இதற்​காக சிக்​கிம் மக்​களை பாராட்​டு​கிறேன். கடந்த கால காங்கிரஸ் ஆட்​சி​யில் வடகிழக்கு மாநிலங்​கள் புறக்கணிக்கப்பட்டன. மத்​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு வடகிழக்​கின் வளர்ச்​சிக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. சிக்​கிமின் வளர்ச்​சிக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் மத்​திய அரசு வழங்​கும். இன்​றைய விழா​வில் 30 திட்​டங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. சிக்​கிமின் சுற்றுலா துறையை மேம்​படுத்த தேவை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்.

சிக்​கிம் மாநிலத்​தின் இயற்கை விவ​சா​யம் ஒட்​டு மொத்த நாட்டுக்கும் முன்​னு​தா​ரண​மாக இருக்​கிறது. சிக்​கிம் மாநிலத்​தில் ஒரு குழந்தை பிறக்​கும்​போது, அந்த குழந்​தை​யின் பெயரில் 108 மரங்​கள் நடப்​படு​கின்​றன. சிக்​கிம் அரசின் இந்த திட்​டம் ஒட்டுமொத்த உலகத்​துக்​கும் முன்​னு​தா​ரண​மாக இருக்​கிறது. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உருவாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த லட்​சிய பயணத்​துக்கு சிக்​கிம் உறு​துணை​யாக இருக்​கிறது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

கால்பந்து விளையாடிய பிரதமர் மோடி: சிக்​கிம் தலைநகர் காங்டாக்​கில் பால்​ஜோர் கால்​பந்து மைதானம் அமைந்​துள்​ளது. இதில் இளம் வீரர்​கள், வீராங்​க​னை​களு​டன் இணைந்து பிரதமர் மோடி நேற்று காலை கால்​பந்து விளை​யாடி​னார். அப்​போது அவர் பந்தை கடத்​திச் சென்று கோல் அடித்​தார். இந்த வெற்​றியை இளம் வீரர், வீரங்​க​னை​களு​டன் சேர்ந்து அவர் கொண்​டாடி​னார். சிறுவர், சிறுமிகளுக்கு கால்​பந்​துகளில் ஆட்​டோகி​ராப் போட்டு கொடுத்​தார்.

இது தொடர்​பான புகைப்​படங்​கள், வீடியோவை அவர் தனது சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு உள்​ளார். அதோடு அவர் வெளியிட்ட பதி​வில், “செவ்​வாய்க்​கிழமை காங்​டாக் மைதானத்தில் இளம் நண்​பர்​களு​டன் சேர்ந்து கால்​பந்து விளையாடினேன். நாங்​கள் கற்​றுக் கொண்​டோம், கொண்டாடினோம், விளை​யாட்டை ரசித்​தோம்" என்​று தெரிவித்துள்​ளார்​.

சிக்கிமில் ரூ.4,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
‘பான் வேர்ல்டு’ வெளியீட்டுக்கு தயாராகும் இந்திய படங்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in