‘ஜனநாயகத்தை பிரதமர் மோடி கொலை செய்​து​விட்டார்’ - சிஜேபி நிறு​வனர் அபிஜித் விமர்சனம்

‘ஜனநாயகத்தை பிரதமர் மோடி கொலை செய்​து​விட்டார்’ - சிஜேபி நிறு​வனர் அபிஜித் விமர்சனம்
Updated on: 
1 min read

பெங்​களூரு: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ராஜி​னாமா செய்​யக்​கோரி பெங்​களூரு​வில் உள்ள சுதந்திர பூங்கா​வில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. கரப்பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் எழுத்​தாளர் தேவனூரு மகாதே​வா, நடிகர் பிர​காஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் அபிஜித் திப்கே பேசும்​போது, “தலைமை தேர்​தல் ஆணை​யர் எஸ்​ஐஆர் மூலம் நாடு முழு​வதும் வாக்​காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்​களை நீக்​கி​யுள்ளார். உயிரோடு இருப்​பவர்​களின் பெயர்​களை எல்​லாம் பட்​டியலில் இருந்து நீக்​கி​யுள்​ளார். அவரது மோசடி​யின் காரண​மாகவே பாஜக கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றது.

இந்த மோசடி​யால் பாஜகவை எதிர்த்த மு.க.ஸ்​டா​லின், மம்தா பானர்ஜி ஆகியோர் தோல்வி அடைந்​தனர். வாக்கு திருட்​டின் மூலமாகவே மோடி மீண்​டும் பிரதம​ராகி இருக்​கிறார். எஸ்​ஐஆர் மூலம் ஜனநாயகத்தை அவர் கொலை செய்து விட்​டார். இளைஞர்கள் அனை​வரும் சேர்ந்து தேசத்​தை​யும் ஜனநாயகத்தையும் மோடி​யிடம் இருந்து மீட்​டெடுப்​போம்” என்றார்.

‘ஜனநாயகத்தை பிரதமர் மோடி கொலை செய்​து​விட்டார்’ - சிஜேபி நிறு​வனர் அபிஜித் விமர்சனம்
“மெட்ரோ திட்டத்தில் திமுகவின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்” - ஸ்டாலின் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in