என்டிஆர்எப் நிறுவன நாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

என்டிஆர்எப் நிறுவன நாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: பேரிடர் காலங்களில் தங்களின் தொழில்முறை திறனாலும் மன உறுதியாலும் உயர்ந்து நிற்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இந்த நாடு மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

பேரிடர் ஏற்படும் போது, என்டிஆர்எப் வீரர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் உயிர்களை பாதுகாக்கவும் நிவாரணம் வழங்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அயராது உழைக்கின்றனர். அவர்களின் திறன்களும் கடமை உணர்வும் மிக உயர்ந்த சேவைத் தரத்துக்கு உதாரணமாக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

என்டிஆர்எப் நிறுவன நாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
தமிழகத்தில் உயர் கல்வியை வளர்த்தவர் எம்ஜிஆர்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in