ஆந்திராவில் போகாபுரம் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடக்கம்
ஆந்திராவில் போகாபுரம் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
Updated on
2 min read

விஜயநகரம்: ஆந்​திராவில் உள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலை​யத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார். ரூ.18,000 கோடி செல​வில் கட்​டப்​பட்ட பல வளர்ச்சி திட்​டங்​களை​யும் பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைத்​தார்.

ஆந்​தி​ரா​வில் உள்ள விசாகப்​பட்​டினம் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் நேற்று முதல் பயணி​கள் விமான சேவையை ரத்து செய்​து, அதற்கு பதில், விஜயநகரம் மாவட்​டம், போகாபுரத்தில் ரூ.4,727 கோடி செல​வில் கட்​டப்​பட்ட அல்​லூரி சீதா​ராம ராஜு சர்வதேச விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார்.

அப்​போது அங்கு நடைபெற்ற கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

ஆந்​தி​ரா​வில் தற்​போது ரூ.18 ஆயிரம் கோடி செல​வில் கட்​டப்​பட்ட பல்​வேறு வளர்ச்சி பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது ஆந்​திர மாநிலம், பொருளா​தார ரீதி​யாக​வும், பூகோள ரீதி​யாகும் மிக​வும் வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இதற்கு காரணம் இம்​மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தான். அவரின் தொலைநோக்​குப் பார்​வையை நான் பெரிதும் மதிக்​கிறேன்.

போகாபுரம் சர்​வ​தேச விமான நிலை​யம் இங்கு அமைந்​த​தால், இப்​பகுதி விரை​வில் பெரு​மளவு வளர்ச்சி பெறும் என்​ப​தில் சந்​தேகம் இல்​லை. இதன் மூலம் இளைஞர்​களின் வாழ்க்​கை​த் தரமும் உயரும். கடந்த கால ஆட்​சி​யில் நம் நாட்​டில் எங்கு விமான நிலை​யங்​கள் திறக்​கப்​பட்​டாலும் ஒரே ஒரு குடும்​பத்தை சேர்ந்​தவர்​களின் பெயர்​கள் தான் சூட்​டப்​படும். ஆனால், அந்த மரபு தற்​போது இல்​லை. அயோத்​தியா விமான நிலை​யத்​திற்கு வால்​மீகி பெயர், பஞ்​சாப் விமான நிலை​யத்​துக்கு சந்த் ரவி​தாஸ், போகாபுரம் சர்வ தேச விமான நிலை​யத்​துக்கு சுதந்​திர போராட்ட வீரர் அல்​லூரி சீதா​ராம ராஜு​வின் பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது.

2014-ம் ஆண்​டுக்கு முன் நம் நாட்​டில் 74 விமான நிலை​யங்​களே இருந்​தன. நாங்​கள் ஆட்​சிக்கு வந்த பின்​னர் இந்த 12 ஆண்​டு​களில் இந்த எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. விமான பயணம் செய்ய வேண்​டும் என ஆசைப்​படும் நடுத்​தர, ஏழை குடும்​பத்​தினர் கனவை நனவாக்கி உள்​ளோம். உடான் திட்​டம் மூலம் நம் நாட்​டில் விமான போக்​கு​வரத்​தில் பல மாற்​றங்​கள், வளர்ச்​சிகளை கண்டு வரு​கிறோம்.

நாட்​டில் கடல் பொருளா​தா​ரத்தை வளர்ச்சி அடைய செய்து வரு​கிறோம். விசாகப்​பட்​டினம் முதல் கிருஷ்ணபட்​டினம் வரை பழைய துறை​முகங்​களை வளர்ச்சிப் பாதை​யில் கொண்டு செல்​கிறோம். மூலபேட்​டா, ராமாய பட்​டினம் ஆகிய இடங்​களில் புதிய துறை​முகங்​களை ஏற்​படுத்​தினோம். துறை​முகங்​கள் ஒரு​புறம் மற்​றொரு புறம் தேசிய நெடுஞ்​சாலை வளர்ச்சி என ஆந்​திரா ஒரு புதிய வளர்ச்சி பாதை​யில் மிக வேக​மாக சென்று கொண்​டிருக்​கிறது.

ரூ.1 லட்சம் கோடியில்..

ஆந்​தி​ரா​வில் ரூ.1 லட்​சம் கோடி செல​வில் ரயில்வே பணி​கள் மிக வேக​மாக நடை​பெற்று வரு​கின்​றன. சாஃப்ட்வேர், ஐடி யில் தெலுங்​கர்​கள் ஆதிக்கம் செலுத்தி வரு​கின்​றனர். சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் ஆந்​தி​ரா​வில் ‘உற்​பத்தி மையம்’ உரு​வாகி வரு​கிறது. உலகில் உள்ள பல பிரபல நிறு​வனங்​கள் ஆந்​தி​ராவை தேடி வரு​கின்​றன. இங்கு தொழில் தொடங்க உள்​ளன. ஆந்​தி​ரா​வில் க்ரோக் எக்கோ சிஸ்​டம் தொடங்​கு​கிறோம். செமி கண்​டக்​டர், டேட்டா சென்​டர் போன்ற நிறு​வனங்​களில் பணி​கள் இங்கு வேக​மாக நடை​பெற்று வரு​கிறது. இந்த டபுள் இன்​ஜின் அரசால், ஆந்​திரா இரட்​டிப்பு வேக​மாக செயல் படு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் ஆந்​திர ஆளுநர் அப்​துல் நசீர், முதல்​வர் சந்​திர​பாபு நா​யுடு, துணை முதல்​வர் பவன் கல்​யாண், மத்​திய அமைச்​சர் ராம்​மோகன்​ நா​யுடு, மற்​றும்​ ஆந்திர எம்​.பி.க்​கள், அமைச்​சர்​கள்​, எம்​.எல்​.ஏக்​கள்​ பலர்​ பங்​கேற்​றனர்.

ஆந்திராவில் போகாபுரம் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in