உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக புதினுடன் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக புதினுடன் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை
Updated on: 
1 min read

புதுடெல்லி: உக்ரைன் போருக்கு முற்​றுப்​புள்ளி வைப்​பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச்சு​வார்த்தை நடத்தி வரு​கிறார் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், மியாமி நகரில் வரும் டிசம்​பர் 14, 15-ம் தேதி​களில் ஜி20 உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு ஜி20 கூட்​டமைப்​பின் வெளி​யுறவு அமைச்சர்களின் மாநாடு அமெரிக்​கா​வின் அட்​லான்டா நகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் பங்​கேற்​றார்.

அங்கு தனியார் செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாடு கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்​கெக்​கில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்​றது. இந்த மாநாட்​டின்​போது ரஷ்ய அதிபர் விளாடி​மிர் புதினை பிரதமர் நரேந்​திர மோடி சந்​தித்​து ரஷ்யா, உக்​ரைன் இடை​யி​லான போருக்கு முற்​றுப்​புள்ளி வைப்​பது தொடர்​பாக பேச்சு​வார்த்தை நடத்​தினார். பயணிகள், சரக்கு கப்​பல்​களின் பாது​காப்பை உறுதி செய்​வது, எரிசக்தி விநியோக சங்​கி​லியை உறுதி செய்​வது குறித்​தும் வலியுறுத்தினார்.

கடந்த செப்​டம்​பரில் டெல்​லி​யில் நடை​பெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின்​போதும் பிரதமர் நரேந்​திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடி​மிர் புதினும் சந்​தித்​துப் பேசினர். அப்​போதும் உக்​ரைன் போருக்கு சுமுக தீர்வு காண்​பது குறித்து பிரதமர் மோடி பேச்சு​வார்த்தை நடத்​தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்​றேன். அப்​போதும் உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக அந்த நாட்டு வெளி​யுறவு அமைச்​சருடன் ஆலோ​சனை நடத்​தினேன்.

எந்​தவொரு பிரச்​சினைக்​கும் ராணுவ ரீதி​யாக தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சு​வார்த்தை மூலம் மட்​டுமே சுமுக தீர்வு காண முடியும். ரஷ்யா, உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்பாக உக்​ரைன் மற்​றும் ஐரோப்​பிய நாடுகளின் தலைவர்களு​டனும் இந்​தி​யாவின் சார்​பில் பேச்சு​வார்த்தை நடத்தப்பட்டது. தற்​போது உல​கின் பல்​வேறு பகுதி​களில் போர்​கள் நடை​பெறுகின்றன.

இந்த போர்​களை ஜி20 கூட்​டமைப்பு தடுத்து நிறுத்த வேண்​டும். கருங்​கடல் பகுதி​யில் தடையற்ற சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய வேண்​டும். அப்​போது​தான் உணவு, எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய முடியும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்.

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக புதினுடன் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை
26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு

X