“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும்” - பிரதமர் மோடி நம்பிக்கை

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும்” -  பிரதமர் மோடி நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுக​மாக நடை​பெறும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நம்​பிக்கை தெரிவித்துள்​ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்​கியது. இதையொட்டி நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரமடைய தொடங்கி உள்​ளது, அதோடு நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரும் தொடங்கி உள்​ளது.

பரு​வ​மழை​யும், மழைக்​கால கூட்​டத் தொடரும் பயனுள்​ள​தாக அமைந்​தால் நமது நாடு செழித்​தோங்​கும். இந்த ஆண்டு பரு​வ​மழையோடு, மழைக்​காலக் கூட்​டத்​தொடரும் பயனுள்​ள​தாக அமை​யும் என நம்​பு​கிறேன். நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் சுமுக​மாக நடை​பெறும் என்று உறு​தி​யாக நம்​பு​கிறேன். கடந்த மாதத்​தில் நமது நாடு பல்​வேறு மைல்​கற்​களை எட்​டியது. அண்​மை​யில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அனில் மேனன் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தார்.

சில நாடு​களில் மட்​டுமே தனி​யார் நிறு​வனங்​கள் விண்​வெளித் துறை​யில் சாதனை படைத்து வரு​கின்​றன. இந்த வரிசை​யில் கடந்த 18-ம் தேதி இந்​திய ஸ்டார்ட்​-அப் நிறு​வன​மான ஸ்கைரூட், விக்​ரம் - 1 ராக்கெட் வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்தி வரலாற்று சிறப்​புமிக்க சாதனையை நிகழ்த்தி உள்​ளது.

இந்த ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் குழு​வினரின் சராசரி வயது 28 ஆண்​டாக உள்​ளது. நான் 56 வயது இளைஞரை (ராகுல் காந்​தி) பற்​றிப் பேச​வில்​லை. வெறும் 28 வயது சராசரியை கொண்ட ஒரு குழு​வைப் பற்றி மட்​டுமே பேசுகிறேன்.

இந்​திய விண்​வெளித் துறை​யில் பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. தனி​யார் நிறு​வனங்​களுக்​கான கதவு திறக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​காரண​மாகவே விண்​வெளித் துறை​யில் ஸ்கைரூட் ஸ்டார்ட்​-அப் நிறு​வனம் அசா​தாரண சாதனையை படைத்​திருக்​கிறது. அந்த நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் அனைத்து இளைஞர்​களை​யும் மனதார பாராட்​டு​கிறேன்.

ராஜஸ்​தானில் அண்​மை​யில் மிகப் பெரிய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் திறக்​கப்​பட்​டது. சில வாரங்​களுக்கு முன்​பு, நாட்டின் 3-வது செமி கண்​டக்​டர் ஆலை திறக்​கப்​பட்​டது. சில நாட்​களுக்கு முன்பு ஹைட்​ரஜன் ரயில் சேவை தொடங்​கப்​பட்​டது. இது உலகின் மிக​வும் சக்​தி​வாய்ந்த, மிக​வும் நீள​மான ஹைட்​ரஜன் ரயில் ஆகும்.

நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் தொடங்​கும் வேளையில் நமது நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யும் வேகம் பெற்​றிருக்​கிறது, லட்​சி​யங்​கள், இலக்​கு​களை அடைய நேர்​மறையான மனப்​பான்மை அவசி​யம். நாடாளு​மன்​றத்​தில் அனுபவ​மிக்க எம்​பிக்​கள் உள்​ளனர், அவர்​களின் அறி​வும் ஞானமும் நாட்​டின் வளர்ச்​சிக்​குத் தேவைப்​படு​கிறது.

நாட்டை முன்​னோக்கி அழைத்​துச் செல்ல நாடாளு​மன்​றம் சுமுகமாக செயல்பட வேண்​டும், அர்த்​த​முள்ள விவாதங்​கள் நடை​பெற வேண்​டும், கூட்​டுத் தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்பட வேண்டும். இது காலத்​தின் கட்​டா​யம். இதுவே இளைஞர்​களின் விருப்​ப​மும் ஆகும். நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரில் அனைத்து எம்​பிக்​களும் தங்​களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்​டு​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும்” -  பிரதமர் மோடி நம்பிக்கை
முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in