பாஜக ஆட்சியில் வன்முறையிலிருந்து அமைதி பாதைக்கு மாறிய அசாம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாஜக ஆட்சியில் வன்முறையிலிருந்து அமைதி பாதைக்கு மாறிய அசாம்: பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: அ​சாம் மாநிலம் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்​சி​யில் வன்​முறையி​லிருந்து அமைதி பாதைக்கு மாறி​யுள்​ள​தாக பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​தார்.

அசாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு ‘எனது வாக்​குச்​சாவடியே வலிமை​யானது’ என்ற பிரச்​சா​ரத்​தின் கீழ் அசாம் மாநில பாஜக வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக உரை​யாடி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: அசாம் மாநிலம் நீண்ட கால​மாக ஸ்திரமின்​மை​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், கடந்த பத்​தாண்​டு​களில் பாஜக​வின் ‘இரட்டை இன்​ஜின்’ அரசு மேற்​கொண்ட நேர்​மை​யான முயற்​சிகளால் அமைதி பாதைக்கு திரும்​பி​யுள்​ளது.

மத்​தி​யிலும் மாநிலத்​தி​லும் பாஜக ஆட்​சிப் பொறுப்​புக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்​களில் பல்​வேறு அமைப்​பு​களு​டன் 12 அமைதி ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி​யுள்​ளன. முந்​தைய காங்​கிரஸ் ஆட்​சி​யில் வெறும் காகித அளவில் மட்​டுமே ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டன. அவை வெறும் செய்​தி​களுக்​காக​வும், மக்​களை திசை​திருப்​புவதற்​காக​வுமே பயன்​படுத்​தப்​பட்​டன.

அசாம் மாநிலம் வன்​முறை​யில் தத்​தளித்த காலத்தை நாம் பார்த்​திருக்​கிறோம். காங்​கிரஸ் ஆட்​சி​யில் இளைஞர்​கள் அமை​தி​யற்ற சூழலுக்​குத் தள்​ளப்​பட்​டனர்.

போடோ இன மக்​களின் கோரிக்​கைகளை காங்​கிரஸ் அரசு வஞ்​சித்​தது. ஆனால், இன்று அசாம் புதிய தன்​னம்​பிக்​கை​யுடன் காணப்​படு​கிறது. அமைதி ஒப்​பந்​தங்​களை நாங்​கள் அடிப்​படை​யில் இருந்து மிகத் துல்​லிய​மாகச் செயல்​படுத்தி வரு​கிறோம்.

பாஜக​வின் மற்​றுமொரு வெற்​றிக்​காக அனை​வரும் கடுமை​யாக உழைத்து வரு​கிறீர்​கள். உங்​களைப் போலவே நானும் கட்​சி​யின் தொண்​டன்​தான். எனக்கு அளிக்​கப்​படும் பொறுப்​பு​களை நான் செவ்​வனே செய்து வரு​கிறேன்.

முதல்​முறை வாக்​களிக்​கும் இளைஞர்​களுக்​கு, காங்​கிரஸின் முந்​தைய தவறான ஆட்சி குறித்து எடுத்​துரைக்க வேண்​டியது அவசி​யம். ஒரு சிறிய தவறு கூட மாநிலத்தை மீண்​டும் பழைய நிலைக்​குத் தள்​ளி​விடும். இதனை அவர்​களுக்கு முறை​யாக எச்​சரித்​திட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அசாமில் உள்ள 126 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்​கான தேர்​தல் ஏப்​ரல் 9-ம் தேதி நடை​பெற உள்​ளது. இம்​மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சியில் வன்முறையிலிருந்து அமைதி பாதைக்கு மாறிய அசாம்: பிரதமர் மோடி பெருமிதம்
5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in